வால்பாறையில் பெண் யானை இறந்த சம்பவம் தொடர்பாக மானாம்பள்ளி வனத்துறை ஆய்வு

யானைக்கு சுமார் 10-முதல் 12-வயது இருக்கும் என்றும், ஆண் யானையுடன் சண்டை போடும் பொது காயங்கள் ஏற்பட்டு இறந்து உள்ளதாகத் வனத்துறை தெரிவித்தனர்.


கோவை: வால்பாறை அருகே குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் மலநாடு என்ற இடத்தில் பெண் காட்டு யானை இறந்த சம்பவம் தொடர்பாக, மானாம்பள்ளி வனத்துறை ஆய்வு செய்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் மலநாடு என்ற தேயிலை திட்டம் பகுதிக்கு வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் துர்நாற்றம் வீசியதைப் பார்த்து தேயிலைத் தோட்டம் அருகில் வன பகுதியில் பார்த்தனர்.



அங்கு காட்டு யானை ஒன்று இறந்து இருந்ததைப் பார்த்து மானாம்பள்ளி வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்து வனத்துறையினர் வந்து பார்த்து வனத்துறை மருத்துவ அலுவலர் சுகுமார் மற்றும் துணை இயக்குநர் செல்வம் வன சரகர் மணிகண்டன் குழுவினர் ஆய்வு செய்தனர்.



யானை இறந்து 10-நாட்கள் மேல் இருக்கும், அழுகிய நிலையில் இருந்தது பெண் காட்டு யானை என்பதும் யானைக்கு சுமார் 10-முதல் 12-வயது இருக்கும் என்றும், ஆண் யானையுடன் சண்டை போடும் பொது காயங்கள் ஏற்பட்டு இறந்து உள்ளதாகத் தெரிவித்தனர். யானையை ஜேசிபி இயந்திரம் மூலம் குழி தோண்டி புதைத்தனர்.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...