மேலும், இவர்களது மகள் அகல்யா (12) அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருப்பூர்: திருப்பூர் அருகே சாலையோர கிணற்றில் ஆட்டோ கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 8 மணி நேர போராட்டத்திற்குப் பின் கணவன், மனைவி உடல் சடலமாக மீட்கப்பட்டது.
கரூர் மாவட்டம் புகளூர் வாங்கலாம்பாளையத்தை சேர்ந்தவர் வடிவேல் (50). இவரது மனைவி பானுமதி (45). இவர்களது மகள் அகல்யா (12). வடிவேல் கோவில் விழாக்களில் மேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
இந்தநிலையில், திருப்பூர் மாவட்டம் சின்னமுத்தூர் செல்லாண்டியம்மன் கோவில் திருவிழாவில் மேடை அமைத்திருந்த அவர், விழா முடிந்ததும் மேடைகளை அப்புறப்படுத்தும் பணிகளை முடித்து விட்டு இன்று காலை லோடு ஆட்டோவில் ஜெனரேட்டர் மற்றும் மேடை பொருட்களை ஏற்றிக்கொண்டு ஊருக்குப் புறப்பட்டார். அவருடன் அவரது மனைவி, மகளும் சென்றனர்.
இந்த லோடு ஆட்டோவை வடிவேல் ஓட்டிச்சென்ற நிலையில், முத்தூர் அருகே சென்னாக்கல்மேடு பகுதியில் செல்லும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லோடு ஆட்டோ தாறுமாறாக ஓடி, சாலையோரமுள்ள ராமலிங்கம் என்பவரின் தோட்டத்துக் கிணற்றுக்குள் பாய்ந்தது.
இதையடுத்து, கிணற்றில் 60 அடி அளவிற்கு தண்ணீர் இருந்தால் லோடு ஆட்டோ தண்ணீரில் மூழ்கியது. இதில் வடிவேல், பானுமதி, அகல்யா ஆகிய 3 பேரும் மூழ்கினர். அதிர்ஷ்டவசமாக அகல்யா மட்டும் தண்ணீரில் நீந்தி தப்பியதுடன், கிணற்றின் மேல் ஏறி சத்தம் போட்டு அப்பகுதி பொதுமக்களை அழைத்தார்.
உடனே அங்குள்ள தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றிலிருந்து 2 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் ஆட்டோ தண்ணீரில் முற்றிலும் மூழ்கியதால் மீட்க முடியவில்லை.
இதையடுத்து, வெள்ளகோவில் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வடிவேல் மற்றும் பானுமதியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தண்ணீருக்குள் மூழ்கிய லோடு ஆட்டோவை மீட்பதற்காக ராட்சத கிரேன் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. அதன் மூலம் மீட்புப் பணி நடந்தது.
8 மணிநேர போராட்டத்திற்குப்பின் இருவரது உடல்களும் மீட்கப்பட்டுள்ளது. மேலும், விபத்துக்கான காரணம் குறித்து வெள்ள கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.