சமையல் வேலை செய்து வரும் 14 வது வார்டு உறுப்பினர் மணிமேகலை செட்டிபாளையம் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் உணவு தானம் வழங்கினார்.
கோவை: கோவை பேரூர் பேரூராட்சியில் 14வது வார்டில் வெற்றி பெற்ற மணிமேகலை தனது வெற்றியைக் கொண்டாடும் விதமாக முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு உணவு தானம் கொடுத்துக் கொண்டாடினார்.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பல்வேறு வகையில் தங்கள் வெற்றியைக் கொண்டாடியும், வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றியையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவை பேரூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில், 12 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றது. குறிப்பாக 15 வார்டுகளிலும் திமுக சார்பில் இளநீர் வியாபாரி, தினக்கூலி, சமையல் வேலை செய்து வருவோர் என சாமானிய கட்சி தொண்டர்களுக்கு திமுக வாய்ப்பு வழங்கியது.
அதில், 14 வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மணிமேகலை என்பவர், சமையல் வேலை செய்து வருகிறார். தற்போது கவுன்சிலராகவும் பதவி ஏற்றுள்ளார்.

தற்போது, இவர் தனது வெற்றியைக் கொண்டாடும் விதமாக பேரூர் செட்டிபாளையம் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வரும் 60 முதியோருக்கு உணவு தானம் வழங்கி தனது வெற்றியைக் கொண்டாடினார்.

மேலும், அவர்களுக்கு என்ன தேவை என்றாலும் உடனடியாக செய்து கொடுக்கவும் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.