சாதாரண பின்னணியில் இருந்து வந்த எனக்கு வாய்ப்பளித்த முதல்வருக்கு, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நன்றி - கோவை மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கல்பனா ஆனந்தகுமார்

நாளை கோவை மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. இதில், திமுக சார்பில் 19வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கல்பனா மேயர் வேட்பாளராக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.



கோவை: நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 100 வேட்பாளர்கள் நேற்று கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் ஆக பதவி ஏற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், நாளை கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. இதில், திமுக சார்பில் 19வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கல்பனா மேயர் வேட்பாளராக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

தற்போது, மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கல்பனா பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ளார். இவரது கணவர் ஆனந்தகுமார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். வாடகை வீட்டில் வசித்து, இருவரும் இ-சேவை மையம் வைத்து நடத்தி வருகின்றனர்.

மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறித்து கல்பனா கூறும்போது, தான் கட்சியில் மூன்று தலைமுறைகளாக பணியாற்றி வருவதாக தெரிவித்தார்.

மேலும், முதல்முறையாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்ட போது கட்சி மேலிடம் வாய்ப்பு கொடுத்தது. 



தற்போது, வெற்றி பெற்று கவுன்சிலராக உள்ள நிலையில் கட்சித் தலைமை மேயர் வேட்பாளராகவும் ஒரு சாமானியனுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

வாய்ப்பை வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தனக்கு தேர்தல் பணியாற்றிய தொண்டர்களுக்கும், வாக்களித்த வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

மேலும், மேயராக பொருப்பேற்றால் இரவு, பகல் பாராமல் பணியாற்ற தயாராக உள்ளதாகவும், கல்பனா தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...