கோவையில் "வலிமை" திரைப்படம் வெளியான திரையரங்கம் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய நபர் கைது.

கோவையில் வலிமை படம் திரையிட்ட 100 அடி ரோட்டில் உள்ள கங்கா, யமுனா, காவேரி திரையரங்கின் மீது பெட்ரோல் குண்டு வீசிய பாளையங்கோட்டையை சேர்ந்த லக்‌ஷ்மணன் (20) என்பவரை கோவை போலீசார் கைது செய்துள்ளனர்.



கோவை: கோவையில் வலிமை திரைப்படம் வெளியான திரையரங்கம் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்ற ஆத்திரத்தில் பெட்ரோல் குண்டு வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோவையில் கடந்த 24ம் தேதி அஜித் நடித்த வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. கோவை 100 அடி சாலையில் உள்ள கங்கா திரையரங்கம் முன்பு ரசிகர்கள் கூடியிருந்த போது, மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில், இருசக்கர வாகனம் ஒன்று சேதமடைந்ததோடு, நவீன்குமார் என்பவருக்கும் காலில் காயம் ஏற்பட்டது. 

இச்சம்பவம் தொடர்பாக காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, கோவை ரத்தினபுரியில் வசித்து வரும் பெயிண்டரான பாளையங்கோட்டையை சேர்ந்த லட்சுமணன் (22) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வலிமை திரைப்படத்திற்கான டிக்கெட்டுக்களை வாங்க சென்ற போது, இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த நவீன்குமார் என்பவர் 100 ரூபாய் பெருமானமுள்ள டிக்கெட்டுக்களை ஆயிரம் முதல் 1200 ரூபாய் வரை விலை வைத்து விற்பனை செய்துள்ளார் எனவும் இதனை தட்டிக்கேட்ட போது, நவீன்குமாரும் அவருடன் இருந்தவர்களும், லட்சுமணனை தாக்கியதாக தெரிவித்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த லட்சுமணன், தனது நண்பர்களுடன் சேர்ந்து பீர்பாட்டிலில், பெட்ரோலை பிடித்து கர்சீப்பால் பெட்ரோல் குண்டு செய்து நவீன்குமார் உள்ளிட்டோர் நின்றிருந்த இடத்தின் மீது வீசியது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவரை கைது செய்துள்ள போலீசார், அவருடன் இருந்த மேலும் 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். பிளாக் டிக்கெட் விவகாரத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...