கோவை மாநகராட்சியில் வருகிற 4-ம் தேதி மேயர் தேர்தல்

கோவை மாநகராட்சியில் வருகிற 4-ம் தேதி மேயர் தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் மாலையே துணை மேயரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலும், மாமன்ற கட்டிடமான விக்டோரியா ஹாலில் நடைபெற உள்ளது.


கோவை: கோவை மாநகராட்சியில் வருகிற 4-ம் தேதி மேயர் தேர்தல் நடைபெற உள்ளது.

கோவை மாநகராட்சியில் 100-வார்டுகளில் தேர்வு பெற்ற கவுன்சிலர்கள் இன்று மாமன்ற கூட்ட அரங்கில் பதவியேற்றுக் கொண்டனர். கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா கவுன்சிலர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ளும் முன்பாக அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் என்னுடைய வார்டு பதவியேற்பு, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது என்பதை நன்கு அறிவேன் எனக்கூறிவிட்டுப் பதவியேற்றனர். பதவியேற்பு விழா நடைபெற்ற மாமன்ற கூட்ட அரங்கில் உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

பதவியேற்பு விழாவை மக்கள் பார்க்கும் வகையில் மாநகராட்சி வளாகத்தில் எல்.இ.டி திரை அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் கோவை மாநகராட்சி யுடியூப் பக்கத்தில் பதவி பிரமாணம் நேரலை செய்யப்பட்டது.

இன்று பதவியேற்ற 100-கவுன்சிலர்களில் 93-பேர் மாமன்றத்திற்கு புதியவர்கள். 7-பேர் மட்டுமே ஏற்கனவே கவுன்சிலராக பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதும், 100-கவுன்சிலர்களில் 55- பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

100-வார்டுகளை கொண்ட கோவை மாநகராட்சியில் திமுக கூட்டணி 96-இடங்களை பிடித்து அருதி பெரும்பான்மையுடன் இருக்கின்றது. திமுக உறுப்பினர்கள் 73-பேர், காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர்கள் 9-பேர், சிபிஎம் மாமன்ற உறுப்பினர்கள் 4-பேர், சிபிஐ மாமன்ற உறுப்பினர்கள் 4-பேர், மதிமுக மாமன்ற உறுப்பினர்கள் 3-பேர், 1-மனித நேய மக்கள் கட்சி மாமன்ற உறுப்பினர், 2-கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உறுப்பினர்கள், அதிமுகவும் 3-மாமன்ற உறுப்பினர்கள், எஸ்.டி.பி.ஐ கட்சியின் சர்பில் 1-சுயேச்சை உறுப்பினர் என 100-உறுப்பினர்களும் இன்று பதவியேற்றனர்.

இதை தொடர்ந்து வருகிற 4-ம் தேதி மேயர் தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் மாலையே துணை மேயரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலும், மாமன்ற கட்டிடமான விக்டோரியா ஹாலில் நடைபெற உள்ளது. கடந்த 1892ம் ஆண்டு கட்டப்பட்ட நூற்றாண்டு பழமை வாய்ந்த விக்டோரியா ஹால் அரங்கில் வருகிற 5-ஆண்டுகளுக்கான மாமன்ற கூட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...