அவிநாசி ரோட்டில் போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகள் கடும் அவதி

உயர் மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைப்பெற்று வருவதால், வேலை நடக்கும் இடத்தைத் தவிர வேறு பகுதி வழியாக வாகனங்கள் சென்றுவர வேண்டி உள்ளது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


கோவை: கோவை அவினாசி சாலை உப்பிலிபாளையம் முதல் கோல்ட்வின்ஸ் வரை சுமார் பத்து கிலோமீட்டருக்கு உயர் மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது.

தற்போது பெரும்பாலான இடங்களில் தூண்கள் கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது. இந்தநிலையில் போக்குவரத்து சிக்னல் அமைத்து இடங்களில் தூண்கள் அமைக்கப்படாமல் இருந்தது. அந்த இடங்களில் தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஹேப் கல்லூரியை அடுத்த அரசு மருத்துவக்கல்லூரி பகுதியில் சிக்னல் அருகே உள்ள மும்முனை சந்திப்பு மற்றும் தண்ணீர் பந்தல் டைடல் பார்க் ஒலம்பஸ்சாலை செல்லும் சந்திப்பில் பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதனால், அந்த பகுதி அடைக்கப்பட்டுள்ளது. வேலை நடக்கும் இடத்தைத் தவிர வேறு பகுதி வழியாக வாகனங்கள் சென்றுவர வேண்டி உள்ளது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கோர்ட்டில் இரு பகுதிகளிலும் 5-கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசையாகச் சிக்கித் தவிக்கின்றன. அரசு ஊழியர்கள் மாணவ-மாணவிகள் சரியான நேரத்திற்கு பணிக்கு செல்ல முடியாமலும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் போக்குவரத்து நெரிசல் உள்ளாகி அவர் அறிந்திருந்தார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...