இந்த பாடலின் வெளியீட்டு விழா கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது.
கோவை: கோவையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் இயற்றிய பாடல் வெளியீட்டு விழா கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது.
பார்வை மாற்றுத்திறனாளிகளான ஜிகுனா சுந்தர் (பாடகர்), சபரீஷ் சச்சிதானந்தம் (இசையமைப்பாளர்), உடுமலை பார்த்திபன் (பாடலாசிரியர்) ஆகியோர் இணைந்து "விழிகள் இல்லாத நேரம்" என்ற பாடலை இயற்றியுள்ளனர்.
இந்த பாடலானது லித்தி (Lithi) என்ற யூடியூப்-ல் வெளியாகியுள்ளது. இந்த பாடலின் வெளியீட்டு விழா கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. பார்வையற்றோர் நலசங்க தலைவர் சதாசிவம் முன்னிலையில் பாடல் வெளியிடப்பட்டது.
பார்வை மாற்றுத்திறனாளிகளின் வாழ்வை மையமாகக் கொண்டு இந்த பாடலானது உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்துப் பேசிய பாடல் குழுவினர், இது தங்களின் முதல் படைப்பு என்றும் இனி வரும் காலங்களில் காதல், கோபம், ஆத்திரம், வெறுமை ஆகியவற்றைக் கொண்டு பாடல்கள் இயற்ற இருப்பதாகவும், சினிமா துறையில் வர ஆசைகள் இருப்பதாகவும் தெரிவித்தனர்.