கோவையில் புதிய மதுபான கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டவர்களிடம் கையெழுத்து பெறப்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு.


கோவை: கோவையில் புதிய மதுபான கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கோவை மாநகராட்சி 1வது வார்டு பகுதியில் துடியலூரில் இருந்து அர்ஜுனா காலனி, ஈஸ்வரா நகர், பி.ஆர்.எம் கார்டன், ராஜு கார்டன், சௌமியா கார்டன்,ஐஸ்வர்யா கார்டன், முல்லை நகர் வழியாக அப்பநாயக்கன்பாளையம் (செங்கல் தோட்டம்) செல்லும் சாலையில் அரசு மதுபான கடையை புதியதாக துவங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

மதுபான கடை துவக்கப்பட உள்ள சாலையின் அருகில் 2 கிறிஸ்தவ ஆலயம், தனியார் பள்ளி மற்றும் எவ்விதமான தெருவிளக்கு வசதிகள் இல்லாததாகும். ஏற்கனவே அந்த பகுதியில் திருட்டு போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகமாக நடைபெறுகின்ற பகுதியாகும்.

மேலும், பள்ளி கல்லூரிகளுக்கு செல்லுகின்ற மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த சாலையில் மதுபான கடை புதியதாக அமைத்தால் மேலும் பொதுமக்களுக்கு இடையூறாகவும், குற்றச் சம்பவங்கள் அதிகமாக நடைபெற வாய்ப்பு உள்ளது.

எனவே, இந்த பகுதியில் அரசு மதுபானக் கடையை துவங்க தடை விதிக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டவர்களிடம் கையெழுத்து பெறப்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதில் 1வது டிவிசன் பொறுப்பாளர் ந. ராஜா தலைமையில் கிளை செயலாளர்கள் M. மகேந்திரன் மற்றும் ANR. மகேஷ்வரன் ஆகியோர் மனு அளித்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...