பொள்ளாச்சி அருகே தனியார் குளிர்பான தொழிற்சாலையிலிருந்து கழிவு நீர் பாசன கால்வாயில் கலப்பதால் விவசாய நிலங்கள் பாதிப்பு - விவசாயிகள் சார் ஆட்சியரிடம் கோரிக்கை..!

விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாகவும், துர்நாற்றம் வீசுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பதாகவும் புகார்.


கோவை: கோவை பொள்ளாச்சி அருகே தனியார் குளிர்பான தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பாசன கால்வாயில் கலப்பதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் சார் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு பாசன படுகைக்கு உட்பட்ட மண்ணூர், ஜலத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய நிலங்கள் உள்ளது.

ஜலத்தூர் கிராமம் அருகே தனியாருக்கு சொந்தமான குளிர்பான தொழிற்சாலை இயங்கி வருகிறது. ஏற்கனவே இந்த தொழிற்சாலை அனுமதி இன்றி செயல்படுவதாக விவசாயிகள் கூறிவரும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக குளிர்பான தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பி.ஏ.பி கிளை வாய்க்காலில் கலக்கிறது.

இதனால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாகவும், மேலும் துர்நாற்றம் வீசுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் இன்று அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்ரே சுபம் ஞான தேவ் ராவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.



அப்போது, கழிவு நீரை பாட்டிலில் நிரப்பி கொண்டு வந்து சார் ஆட்சியரிடம் முறையிட்டனர். உடனடியாக தனியார் குளிர்பான தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுத்து பாசன கால்வாயில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...