உக்ரைனில் தவிக்கும் வால்பாறை மருத்துவ மாணவிகளை மீட்க பெற்றோர்கள் கோரிக்கை

உக்ரைன் நாட்டில் உள்ள வால்பாறையைச் சேர்ந்த 3-மருத்துவக் கல்லூரி மாணவிகளைப் பாதுகாப்பாகத் தமிழகத்திற்கு அழைத்துவரத் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்கப் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


கோவை: வால்பாறையில் உள்ள 3-மருத்துவக் கல்லூரி மாணவிகள் உக்ரைன் நாட்டில் உள்ளதால் அவர்களை அழைத்துவரத் தமிழக அரசுக்குப் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உக்ரைனில் போர் ஏற்பட்டு வருவதால் இந்திய மக்கள் உக்ரைன் நாட்டில் உள்ளவர்களை இந்திய அரசு பாதுகாப்பாக அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.



கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த தீபிகா 4-ம் ஆண்டு மருத்துவ படிப்பு, வர்ஷா 2-ஆண்டு மருத்துவ படிப்பு, மோகனா 2-ம் ஆண்டு மருத்துவ படிப்பு, ஆகிய 3-மாணவிகள் உக்ரைன் நாட்டில், மெட்ரோ மஹால் பிளாக், C நேஷனல் யூனிவர்சிட்டி, லோஹோ வென்ஹா, 2-மைக்காலைவ் ஒபாலாஷ்ட் என்ற இடத்தில் மருத்துவ படிப்பு படித்து வருகின்றனர்.

உக்ரைன் நாட்டில் போர் நிலவி வருவதால், அங்குப் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.



நாடு முழுவதும் மக்கள் பதுங்கு குழியில் பதுங்கி உயிர் தப்பிய வருவதாகவும், அந்நாட்டில் விமானச் சேவை நிறுத்தப்பட்டு உள்ளதாகவும், அங்கு வாழும் இந்தியர்களைப் பாதுகாப்பாக அழைத்து வருவதற்காக இந்திய அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதால், விமான தளத்திலிருந்து சுமார் 1200-கிலோ மீட்டர் தொலைவில் படிக்கும் வால்பாறையைச் சேர்ந்த 3-மருத்துவக் கல்லூரி மாணவிகளைப் பாதுகாப்பாகத் தமிழகத்திற்கு அழைத்துவரத் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்கப் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...