கோத்தகிரி அருகே உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து

பல லட்சம் மதிப்பிலான தேயிலைத் தூள் மற்றும் தேயிலை தொழிற்சாலை உபகரணங்கள் எரிந்த சம்பவம், கப்பட்டி கிராம பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் தொழிற்சாலை முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது.

கோத்தகிரியிலிருந்து சுமார் 7 கிமீ தொலைவில் அமைந்துள்ளது கப்பட்டி கிராமம். இங்கு தனியார் ஆரஞ்சு வேலி தேயிலை தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையில் இரவு நேர தேயிலை அரைக்கும் பணியில் நேற்று இரவு ஆறு பேர் பணிபுரிந்து வந்துள்ளனர்.



இந்நிலையில், நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால், கணிமைக்கும் வேளையில் மளமளவெனத் தொழிற்சாலை முழுவதும் தீ பரவ தொடங்கியது உடனே இரவு நேர பணியில் இருந்த பணியாளர்கள் தீயணைப்புத் துறையினருக்கும், காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர். சுமார் 4 மணி நேர போராட்டத்திற்குப் பின் தீ அணைக்கப்பட்டது. ஆனால், அதற்குள் தேயிலை தொழிற்சாலை முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. இது தொடர்பாகத் தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தொழிற்சாலையில் தேயிலை தூள் தயாரிக்கும் போது பயன்படுத்தப்படும் அடுப்பிலிருந்து தீ பரவியதா? அல்லது மின்கசிவு காரணமாக இருக்குமா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

அதிர்ஷ்டவசமாகக் குறைந்த எண்ணிக்கையில் பணியாளர்கள் பணி செய்ததால் அனைவரும் எவ்வித பாதிப்பும் இன்றி தொழிற்சாலையை விட்டு உடனே வெளியேறி விட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...