கோவையில் களைக்கட்ட தயாராகும்‌ ஈஷா மஹாசிவராத்திரி..!

இவ்விழா, பல்வேறு இசைக்கலைஞர்களுடன் மார்ச்‌ 1ம்‌ தேதி மாலை 6 மணி முதல் மறுநாள்‌ காலை 6 மணி வரை நடைபெற உள்ளது.


கோவை: கோவையில் ஈஷா மஹாசிவராத்திரி விழா களைக்கட்டத் துவங்கியுள்ளது.

இந்த விழாவிற்கான இசைக் கலைஞர்களின்‌ விவரங்கள்‌ இதோ:-

உலகளவில்‌ புகழ்பெற்ற ஈஷா மஹாசிவராத்திரி விழா இந்தாண்டும்‌ பல்வேறு மாநில கலைஞர்களுடன்‌ களைக்கட்ட தயாராகிவிட்டது.

பல பிரபல தமிழ்ப்‌ படங்களில்‌ சிறந்த பாடல்களைப் பாடிய பின்னணி பாடகர்‌ ஷான்‌ ரோல்டன்‌ இந்தாண்டு ஈஷா மஹாசிவராத்திரி விழாவில்‌ பாட உள்ளார்‌. திரைப் பாடல்கள்‌ மட்டுமின்றி கர்நாடக இசை சங்கீதத்திலும்‌ அவர்‌ கரைகண்டவர்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்தாண்டு தன்‌ கம்பீர குரலால்‌ சிவனைப் போற்றி பாடல்கள்‌ பாடி மக்களைக் கவர்ந்த தெலுங்கு பாடகி மங்கலி இந்தாண்டும்‌ இன்னிசையை வழங்க உள்ளார்‌. மேலும்‌, பாலிவுட்‌ திரை உலகில்‌ பல பக்தி பாடல்களை பாடியுள்ள பின்னணி பாடகர்‌ மாஸ்டர்‌ சலீமும்‌ இவ்விழாவில்‌ பாட உள்ளார்‌. அவர்‌ பஞ்சாபி மொழியிலும்‌, சூஃபி இசையிலும்‌ இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார்‌.



அசாமின்‌ புகழ்பெற்ற பின்னணி பாடகர்‌ பப்பான்‌ (10) ஹிமாச்சல்‌ பிரதேசத்தைச்‌ சேர்ந்த பாடகர்‌ ஹன்ஸ்ராஜ்‌ ரகுவன்சுயும்‌ தங்களின்‌ இசை அர்ப்பணிப்பை வழங்க உள்ளார்‌. இதுதவிர, ஈஷாவின்‌ சொந்த இசைக் குழுவான 'சவுண்ட்ஸ்‌ ஆஃப்‌ ஈஷா' வும்‌, ஈஷா சம்ஸ்‌கிருதி குழுவினரும்‌ தங்கள்‌ இசை மற்றும்‌ நடன நிகழ்ச்சிகளை அர்ப்பணிக்க உள்ளனர்‌.

இவ்வாறு, தமிழ்நாடு, ஆந்திரா, பஞ்சாப்‌, இமாச்சல்‌ பிரதேஷ்‌, அசாம்‌ என பல மாநில கலைஞர்களுடன்‌ ஈஷா மஹாசிவராத்திரி விழா களைக்கட்ட உள்ளது.

இவ்விழா, கோவை ஈஷாவில்‌ மார்ச்‌ 1ம்‌ தேதி மாலை 6 மணிக்குத் தொடங்கி மறுநாள்‌ காலை 6 மணி வரை நடைபெற உள்ளது. சிவனின்‌ அருள்‌ நிறைந்த இரவு என அழைக்கப்படும்‌ மஹாசிவராத்திரி அன்று மக்களை இரவு முழுவதும்‌ விழிப்பாகவும்‌, விழிப்புணர்வாகவும்‌ வைத்திருப்பதற்காக இத்தகைய இசை மற்றும்‌ நடன நிகழ்ச்சிகள்‌ நடத்தப்பட்டு வருகிறது.

இவ்விழா தமிழ்‌, தெலுங்கு, கன்னடம்‌, இந்தி, மராத்தி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில்‌ முன்னணி தொலைக்காட்சிகள்‌ மற்றும்‌ யூ- டூயூப்‌ சேனல்களில்‌ நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. மக்கள்‌ தங்கள்‌ இல்லங்களில்‌ பாதுகாப்பாக இருந்தபடியே நேரலையில்‌ பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்‌.

கடந்தாண்டு ஈஷா மஹாசிவராத்திரியின்‌ நேரலை உலக அளவில்‌ புகழ்பெற்ற கிராமி விருது வழங்கும்‌ விழாவையே முந்தி அதிக பார்வைகளைப் பெற்று உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...