மது அருந்த பணம் இல்லையே என்ற ஏக்கத்தில் 2 கடைகளிலும் சிமெண்ட் சீட்டை உடைத்து உள்ளே இறங்கி பணத்தை திருடி உள்ளார்.
கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே சிக்கலம்பாளையத்தில் 2 கடைகளில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கிணத்துக்கடவு சிக்கலாம்பாளையம் மதுக்கடை அருகே சந்தேகத்திற்கிடமாக நின்ற வாலிபரை கிணத்துக்கடவு போலீசார் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அந்த வாலிபர், திருப்பூர் ஆயில் மில் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பாலாஜி (33) என்பதும், கிணத்துக்கடவு அருகே சிக்கலாம்பாளையத்தில் இருசக்கர வாகன ஆட்டோ கன்சல்டிங் கடை மற்றும் அதன் அருகில் இருந்த மற்றொரு கடையிலும் பணத்தை திருடியது தெரியவந்தது.
மேலும், அவர் மீது திருச்சி, திருப்பூர் வடக்கு, அவிநாசி, கருமத்தம்பட்டி, அன்னூர், சரவணம்பட்டி ஆகிய காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன.
திருப்பூரில் திருட்டு வழக்கில் கைதாகி கடந்த 15 மாதங்களாக கோவை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்துவிட்டு சிறையில் இருந்து வெளியே வந்து கிணத்துக்கடவில் உள்ள பாட்டி வீட்டிற்குச் சென்றார்.
அங்கு மது அருந்த பணம் இல்லையே என்ற ஏக்கத்தில் 2 கடைகளிலும் சிமெண்ட் சீட்டை உடைத்து உள்ளே இறங்கி பணத்தை திருடி உள்ளார். இதனை தொடர்ந்து, மது வாங்க டாஸ்மாக் கடைக்குச் சென்ற போது சிக்கினார்.