மாணவர்களுக்கு எவ்வாறு கற்றுக்கொடுக்க வேண்டும், அதற்காக தன்னார்வலர்கள் எவ்வாறு தயாராக வேண்டும் போன்றவை பயிற்சி.
கோவை: கோவையில் இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்காக மாவட்டம் முழுவதும் 88 மையங்களில் 6112 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை குனியமுத்தூரில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் 2ம் கட்ட பயிற்சி மற்றும் கண்காட்சியை கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா துவங்கி வைத்தார். இந்த பயிற்சி மற்றும் கண்காட்சியில் 132 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
இதில் மாவட்ட கல்வி அதிகாரிகள் பழனிசாமி, செந்தில்குமார், மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

மாவட்டம் முழுவதும் 88 மையங்களில் 6112 தன்னார்வலர்களுக்கு இன்று முதல் மூன்று நாட்களுக்கு (24, 25 மற்றும் 26ம் தேதி) இந்த பயிற்சி நடைபெறுகிறது.
இந்த பயிற்சியில் இல்லம் தேடி கல்வி குறித்து மாணவர்களுக்கு எவ்வாறு கல்வி கற்றுக்கொடுக்க வேண்டும், அதற்காக தன்னார்வலர்கள் எவ்வாறு தயாராக வேண்டும் உள்ளிட்டவைகள் தெளிவுபடுத்தப்பட உள்ளன.