தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் தொழிற்கல்வி படித்த மாணவர்களுக்கு கூடுதலாக 100 இடங்கள் ஒதுக்கீடு..!

இதனால், 98 இடங்களாக இருந்த இட ஒதுக்கீடு தற்போது 198 இடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் தொழிற்கல்வி படித்த மாணவர்களுக்கு கூடுதலாக 100 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை கவுன்சலிங் நேற்று முன் தினம் துவங்கியது. இதில் நேற்று சிறப்பு ஒதுக்கீட்டில் தொழிற்கல்வி படித்த மாணவர்களுக்கு கூடுதலாக 100 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால் 98 இடங்களாக இருந்தது தற்போது 198 இடங்களாக அதிகரிக்கப்பட்டது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 12 இளநிலை பட்டப்படிப்புகள், 18 உறுப்பு கல்லூரிகள் மற்றும் 28 இணைப்பு கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பெறப்பட்டன. சுமார், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த மாதம் 28ம் தேதி வெளியிடப்பட்டது.

இதையடுத்து, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேற்று முன் தினம் துவங்கியது. வரும் மார்ச் 26ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாளான நேற்று முன் தினம் சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடந்தது. அதன்படி, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் என 100க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் நேற்று தொழில்முறை கல்வி பிரிவினருக்கு கலந்தாய்வு நடந்தது.

இதனிடையே தொழிற்கல்வி பயின்றவர்களுக்கு இதுவரை அரசு கல்லூரிகளில் மட்டுமே 5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இதனை தனியார் கல்லூரிகளுக்கும் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற தீர்ப்பின் வழிகாட்டுதல் அடிப்படையில் தமிழக அரசு இட ஒதுக்கீடிற்கான அரசாணை வெளியிட்டது. இது இந்த கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது.

இதையடுத்து, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சிறப்பு ஒதுக்கீட்டில் தொழிற்கல்வி படித்த மாணவர்களுக்கு கூடுதலாக 100 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன்படி, நேற்று நடந்த கலந்தாய்வில் 110 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 100 இடங்கள் அதிகரித்தது மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என பல்கலைக்கழக டீன் மற்றும் மாணவர் சேர்க்கை தலைவர் கல்யாணசுந்தரம் தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...