மகனை கொடூரமாக தாக்கிய வீடியோ வைரலான நிலையில், தந்தையை போலீசார் கைது செய்தனர்.
கோவை: கோவை மதுக்கரை அருகே 5 வயது சிறுவனை கொடூரமாக தாக்கிய வீடியோ வைரல் ஆன நிலையில் மகனைத் தாக்கிய தந்தையை போலீசார் கைது செய்தனர்.
கோவை மதுக்கரை அறிவொளிநகர் பகுதியைச் சேர்ந்தவர் சாதிக்பாஷா (32) இவரது மனைவி ரெஜினா பானு. இவர்களுக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி முகமது அசாருதீன் (10) முகமது அர்சத்தீன் (5) என்ற இரு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், கணவன், மனைவி இடையே ஏற்பட்ட வேறுபாடு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதில் மூத்த மகன் ரெஜினா பானுவுடனும், இளைய மகன் சாதிக் பாஷாவுடனும் வசிக்கின்றனர்.
இந்நிலையில், இளையமகன் அர்ஷத்தீனை, சாதிக் பாஷா கொடூரமாக தாக்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இதையடுத்து வீடியோ குறித்து மதுக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் சாதிக் பாஷாவை கைது செய்தனர்.
இதையடுத்து, அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், தனது மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்பியதாகவும், ஆனால் அவர் செல்போனில் தொடர்பு கொண்டபோது எடுக்காமல் இருந்த நிலையில் இளைய மகன் தாய் ரெஜினா பானுவை சந்தித்ததால் ஆத்திரத்தில் தாக்கியதாக கூறி உள்ளார்.
இதுகுறித்து, அப்பகுதியில் உள்ளவர்கள் கூறும்போது, அடிக்கடி மது போதையில் வந்து மகனை சாதிக் பாஷா கொடூரமாக தாக்கி வருவதாகவும், சிறுவனைக் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.