இதையடுத்து, சாய்பாபா காலனி போலீசார் சம்பந்தப்பட்ட வேட்பாளர், ஏஜென்டுகள் மீது மூன்று சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர்.
கோவை: கோவையில் ஓட்டு எண்ணிக்கைக்கு இடையூறு செய்ததாக, அரசியல் கட்சிகளின் ஏஜென்டுகள் மீது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கோவை மாநகராட்சி உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக பணியாற்றியவர் கருப்பாத்தாள். இவர், மாநகராட்சியின் 5 வார்டுகளுக்கான தேர்தலை நடத்தி முடிக்கும் பொறுப்பில் இருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம், ஜி.சி.டி., வளாகத்தில் 32ம் வார்டுக்கான ஓட்டு எண்ணிக்கையை, தலைமை வகித்து கருப்பாத்தாள் நடத்தி கொண்டிருந்தார்.
அப்போது, அ.தி.மு.க.,- பா.ஜ.க நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் ஏஜென்டுகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் இணைந்து, ஓட்டு எண்ணிக்கைக்கு இடையூறு செய்ததாக, கருப்பாத்தாள் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
இந்த வேட்பாளர்கள் நால்வரும் கூச்சல் போட்டும், சட்டப்பூர்வமான கடமையை செய்யவிடாமல் தடுத்தும் இடையூறு செய்ததாக, புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, 46ம் வார்டு ஓட்டு எண்ணிக்கையின்போது, அ.தி.மு.க.,- பா.ஜ.க, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களின் ஏஜென்டுகள் இடையூறு செய்ததாகவும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் புகார் தெரிவித்துள்ளார்.
சாய்பாபா காலனி போலீசார், சம்பந்தப்பட்ட வேட்பாளர், ஏஜென்டுகள் மீது மூன்று சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர்.