விவசாயம் செய்யும் பூமியில் வாழைகளை அழித்து, சொட்டுநீர் பைப் லயன்களை உடைத்து சேதப்படுத்தி விவசாயம் செய்யாமல் தடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் விவசாய சங்கத்தினர் ஆலாந்துறை காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து விவசாய சங்கத்தினர் எஸ்.பி. செல்வநாகரத்தினத்திடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டம் ஆலாந்துறை காவல் நிலையத்திற்கு உட்பட்ட சீனிவாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த நமது சங்கத்தைச் சேர்ந்த விவசாயி ஆறுச்சாமி அவர்களை ஆலாந்துறை உதவி காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் அவர்கள் அதே ஊரைச் சேர்ந்த தேவி என்ற பெண்ணிடம் சேர்ந்து நமது சங்கத்தைச் சேர்ந்த விவசாயி ஆறுச்சாமி அவர்களை மிரட்டி விவசாயம் செய்யாமல் தடுத்துள்ளார்.
கடந்த 15 தினங்களாக தொந்தரவு செய்து, இவர் விவசாயம் செய்யும் பூமியில் வாழைகளை அழித்து சொட்டுநீர் பைப் லயன்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளார்கள். அதற்குண்டான இழப்பீடும் வழங்கவில்லை. இதை தட்டி கேட்டால் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்து விடுவோம் என்று மிரட்டி வருகிறார்.
எனவே, ஆலாந்துறை உதவி காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, தங்கள் கவனத்தில் எடுத்துக்கொண்டு உண்மையை அறிந்து எங்களது சங்கத்தைச் சேர்ந்த விவசாயி ஆறுச்சாமி அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றி பாதுகாப்பு கொடுத்து ஆறுச்சாமி அவர்களை விவசாயம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.