பக்கத்து வீட்டு காம்பவுண்ட் சுவரில் உணவு வைத்ததால் ஏற்பட்ட தகராறில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கோவை: கோவையில் நாய்களுக்கு உணவு வைத்ததால் ஏற்பட்ட தகராறில் பக்கத்து வீட்டுப் பெண்ணை கத்தியால் குத்திய நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை சிங்காநல்லூரை அடுத்த குரு அப்பார்ட்மெண்ட் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி என்பவரின் மனைவி ஜெயசித்ரா (47). இவரது மகன் கோவை ராமநாதபுரம் பழனியப்பா நகர் பகுதியில் உள்ள ஜெயசித்ராவின் அம்மா வீட்டில் தங்கியிருந்து படித்து வருகிறார்.
இந்நிலையில், ஜெயசித்ரா அம்மா வீட்டின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் ரங்கநாதன். இவர் தனது வீட்டில் மீதமாகும் உணவுகளை தெருநாய்கள் மற்றும் பூனைகளுக்கு கொடுப்பது வழக்கம். அதற்கான உணவுகளை ஜெயசித்ராவின் அம்மா வீட்டு காம்பவுண்ட் சுவரில் ரங்கநாதன் வைத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயசித்ரா கேள்வி எழுப்பினார். மேலும், பழைய உணவுகள் துர்நாற்றம் வீசுவதாகவும் தங்களது வீட்டு சுவற்றில் வைக்க வேண்டாம் என்றும் ஜெயசித்ரா கூறியுள்ளார்.
இந்நிலையில், நேற்று ஜெயசித்ரா தனது அம்மா வீட்டிற்குச் சென்று இருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் ரங்கநாதன் மீண்டும் பழைய உணவுகளை சுவரில் வைத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து ஜெயசித்ரா கேள்வி எழுப்பி உள்ளார் .இதில் ஜெய சித்ராவுக்கும் ரங்கநாதனுக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் ரங்கநாதன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜெயசித்ராவை குத்த முயன்றார். அதை தடுக்க முயன்ற ஜெய சித்ராவுக்கு கையில் கத்தி குத்து பட்டது.
மேலும், ஜெய சித்ராவை கீழே தள்ளிவிட்ட ரங்கநாதன் கற்களை எடுத்து அவர்மீது வீசினார். இதில் ஜெய சித்ராவிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் உள்ளவர்கள் ஜெயசித்ராவை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேலும், இதுகுறித்து ஜெயசித்ரா ராமநாதபுரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.