பேருந்தினுள் சிதம்பரனாரின் உருவச்சிலை, இந்திய சுதந்திரத்திற்காக அவர் செய்த போராட்டத்தின் கால குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
கோவை: கோவையில் வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் புகைப்பட கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நகரும் புகைப்படக் கண்காட்சியை முதல்வர் சென்னையில் சில தினங்களுக்கு முன்பு துவக்கி வைத்தார்.
இதனிடையே, இந்த கண்காட்சி பேருந்து இன்று கோவைக்கு வந்தடைந்த நிலையில், அதனை மாவட்ட ஆட்சியர் சமீரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேருந்து இன்று மற்றும் நாளை கோவை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு (கணபதி, சரவணம்பட்டி, கோவில்பாளையம், அன்னூர், ஆனையூர், சிறுமுகை புதூர், குனியமுத்தூர், மலுமிச்சம்பட்டி, ஒத்த கால் மண்டபம், கிணத்துக்கடவு, சேரிப்பாளையம்) செல்ல உள்ளது.

பேருந்தினுள் சிதம்பரனாரின் உருவச்சிலை, சிதம்பரனார் வாழ்க்கை வரலாற்றைக் குறிக்கும் புகைப்படங்கள், இந்திய சுதந்திரத்திற்காக அவர் செய்த போராட்டத்தின் கால குறிப்புகள், கோவையில் மத்திய சிறையில் வைக்கப்பட்டுள்ள அவர் இழுத்த செக்கின் புகைப்படம், இந்திராகாந்தி சிதம்பரனாரின் திருவுருவச் சிலையைத் திறந்துவைத்த புகைப்படம் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.