முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வசிக்கும் சுகுணாபுரம் 92-வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றிச்செல்வன் 5087-வாக்குகளும், எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக செல்லப்பன் 4631-வாக்குகளும் பெற்று, திமுக வேட்பாளர் வெற்றிச்செல்வன் 456-வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
கோவை:நடைப்பெற்ற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வசிக்கும் 92-வது வார்டில் திமுக வெற்றி பெற்றுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தமிழகம் முழுவதும் பரபரப்பாக நடந்து முடிந்தது. 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் வெளியாகி உள்ளன. இன்று காலை முதலே தமிழகம் முழுவதும் மற்றும் கோவை மாவட்டத்தில் திமுக வேட்பாளர்கள் அதிக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றிருந்தன.
திமுக கடந்த பாராளுமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தை வெற்றி பெற்றுத் தக்க வைத்தது. அடுத்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மற்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக கோவையில் உள்ள 10-எம்.எல்.ஏ தொகுதிகள் வெற்றி பெறமுடியாமல் தோல்வியைத் தழுவியது.
ஆதலால் அதிமுகவினர் கோவை மாவட்டம் அதிமுகவின் கோட்டை அதை யாராலும் வெற்றி பெற முடியாது என கூறி வந்தனர். இந்த நிலையில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100-வார்டுகளுக்கான வாக்குப்பதிவு முடிந்து இன்று எண்ணிக்கை தொடங்கியது.
எண்ணிக்கை துவங்கியதிலிருந்தே தொடர்ந்துதிமுக அனைத்து தொகுதிகளிலும் முன்னிலை பெற்று தற்சமயம் வரை 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளது. இதில் கோவை சுகுணாபுரம் பகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வசித்துவருகிறார்.
அவருடைய வீடு 92-வது வார்டுக்குள் வருகிறது. அங்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் வெற்றிச்செல்வன் 5087- வாக்குகளும், எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக செல்லப்பன் 4631-வாக்குகளும் பெற்று திமுக வேட்பாளர் வெற்றிச்செல்வன் 456-வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இதேபோல முன்னால் அமைச்சர் வேலுமணி போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள தொகுதியான தொண்டாமுத்தூர் பேரூராட்சியையும் திமுக கைப்பற்றியுள்ளது.
மொத்தத்தில் அதிமுகவினுடையஎஃகு கோட்டையில் ஓட்டை விழுந்து தரைமட்டமாக்கப் பட்டுள்ளதாக திமுகவினர் பரபரப்பாகப் பேசிக் கொள்கின்றனர்.