விசைத்தறி உரிமையாளர்கள் சோமனூர் சங்கம் சார்பில் இன்று முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்

விசைத்தறி உரிமையாளர்கள் சோமனூர் சங்கம் சார்பில், இன்று முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம். போலீசார் அனுமதி மறுத்ததால் சாமியானா பந்தல் மற்றும் நாற்காலிகள் அமைக்கத் தடை விதிக்கப்பட்டது. குடை பிடித்தும் தலையில் துண்டை போர்த்தியும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.



கோவை: விசைத்தறி உரிமையாளர்கள் சோமனூர் உள்ளிட்ட 5-சங்கங்கள் எழுத்து வடிவிலான ஒப்பந்தம் கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தைத் தீவிரப்படுத்த இன்று காலை 10-மணி முதல் காரணம் பேட்டை பகுதியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

அரசு அறிவித்த கூலி உயர்வை ஒப்பந்த வடிவில் வழங்க மறுக்கும் ஜவுளி உற்பத்தியாளர்களைக் கண்டித்தும், கூலி உயர்வை ஒப்பந்த வடிவில் அமல்படுத்த மாவட்ட நிர்வாகங்களை வலியுறுத்தியும், விசைத்தறியாளர்கள் குடும்பத்துடன் 21-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை காரணம் பேட்டை பகுதியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.



இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சோமனூர், அவிநாசி, தெக்கலூர், புதுப்பாளையம், பெருமாநல்லூர் என 5-சங்கங்கள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஜனவரி 9-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெற்று வந்த நிலையில், அமைச்சர் சாமிநாதன் முன்னிலையில், நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில், பல்லடம் ரகத்திற்கு 15- சதவீதம், மற்ற ரகங்களுக்கு 19-சதவீதமும் என உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து பல்லடம், மங்கலம், 63.வேலம்பாளையம் உள்ளிட்ட 4-சங்கங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று விசைத்தறியை இயக்கி வருகின்றனர்.



சோமனூர் உள்ளிட்ட 5-சங்கங்கள் எழுத்து வடிவிலான ஒப்பந்தம் கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தைத் தீவிரப்படுத்த இன்று காலை 10-மணி முதல் காரணம் பேட்டை பகுதியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

உண்ணாவிரதப் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் சாமியானா பந்தல் மற்றும் நாற்காலிகள் அமைக்கத் தடை விதித்தனர்.



இதனையடுத்து, சாலையோரம் அமர்ந்து தலையில் துண்டை போர்த்தியும், குடை பிடித்தும் விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என 500-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...