ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் மாநகராட்சி துணை ஆணையர் மோ.ஷர்மிளா தலைமையில் பயிற்சி வழங்கப்பட்டது.
கோவை: கோவை ஆர்.எஸ்.புரத்தில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட உள்ள 340 தேர்தல் அலுவலகர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
கோவை மாநகராட்சியின் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவர்கள்
உத்தரவின்படி, மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் மாநகராட்சி துணை ஆணையர் மோ.ஷர்மிளா தலைமையில் 340 தேர்தல் அலுவலகர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
கடந்த 19ம் தேதி வாக்குப் பதிவு நிறைவடைந்த நிலையில் 22ம் தேதி நாளை கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில், மாநகராட்சி உதவி ஆணையர் (நிர்வாகம்) சரவணன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.