கோவை சேரன் மாநகர் பகுதியில் 22வது வார்டில் உயிரிழந்த 400 நபர்களுக்கு ஓட்டு..! மேலும் 700 பேருக்கு இரண்டு இடங்களில் ஓட்டு!!

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்துள்ளதற்கு தேர்தல் ஆணையத்தின் குளறுபடிகள் முக்கிய காரணம் என்று குற்றச்சாட்டு.


கோவை: கோவை சேரன் மாநகர் பகுதியில் 22வது வார்டில் உயிரிழந்த 400 நபர்களுக்கு வாக்கு இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, விளாங்குறிச்சி ரோட்டில் அமைந்துள்ளது சேரன் மாநகர் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் குடியிருப்புப் பகுதி. இங்கு ஏ,பி,சி என மொத்தம் 3 பிரிவுகளில் 568 வீடுகள் உள்ளன. தவிர சுற்றுப்புறங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

கோவை மாநகராட்சி 22வது வார்டின் கீழ்வரும் இப்பகுதியில் 58 நகர்கள் உள்ளது. மொத்தம் 13 ஆயிரத்து 788 வாக்காளர்கள் உள்ளனர். நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சேரன் மாநகர் அமைந்திருக்கும் 22வது வார்டு பகுதியில் 7,276 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. இதற்கு வெளியாகியுள்ள காரணங்கள் மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது உள்ளது.

இதுகுறித்து அரசியல் கட்சி மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது, "சேரன் மாநகர் அமைந்திருக்கும் 22வது வார்டு பகுதியில் ஓட்டுப்பதிவு மிக குறைவாக உள்ளதற்கு தேர்தல் ஆணையத்தின் குளறுபடியே காரணம்.

வாக்காளர்கள் பலருக்கு பூத் ஸ்லிப் சரியாக வழங்கப்படவில்லை. தவிர ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கு வெவ்வேறு இடங்களில் ஓட்டுப்பதிவு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர 700 நபருக்கு இரண்டு இடங்களில் ஓட்டுப்பதிவு பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ளது. இவை எல்லாவற்றுக்கும் மேல், உயிரிழந்தவர்கள் பெயர் நீக்கப்படாமல் வாக்காளர் பட்டியலில் தொடர்ந்து உள்ளது. இந்த வார்டில் மட்டும் உயிரிழந்த 400 நபர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

ஓட்டுப்பதிவு குறைந்துள்ளதற்கு மற்றுமொரு முக்கிய காரணம் மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு அடுத்து உள்ள தர்மசாஸ்தா பள்ளியில் வாக்களித்து வந்த மக்களுக்கு, இந்த முறை சேரன் மாநகர் வாக்குப்பதிவு மையம் ஓட்டு போட ஒதுக்கப்பட்டிருந்தது.

அதிக தூரம் கடந்து வந்து ஓட்டு போட வேண்டும் என்ற காரணத்தால் அப்பகுதியில் உள்ள பல வாக்காளர்கள் ஓட்டு போட ஆர்வம் காட்டவில்லை. மொத்தத்தில் இந்தத் தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்துள்ளதற்கு தேர்தல் ஆணையத்தின் குளறுபடிகள் முக்கிய காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...