நடைபெற்று வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில், கோவை மாநகராட்சி 67வது வார்டில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் அவரது இணையர் வனஜா நடராஜனுடன் தனது வாக்கினை செலுத்தினார்.
கோவை: நடைபெற்று வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில், கோவை மாநகராட்சி 67வது வார்டில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் அவரது இணையர் வனஜா நடராஜனுடன் தனது வாக்கினை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழகத்தில் நடைபெறுகிற இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்களின் பேராதரவை பெற்ற அணியாக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி உள்ளது. இந்த அணி அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள அனைத்து பதவிகளையும் கைப்பற்றி மாபெரும் வெற்றியைப் பெறும். இது தமிழக மக்களின் மனநிலையில் இருந்து தெளிவாக தெரிகிறது. தமிழக முதலமைச்சர், மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வேன் என்று அளித்துள்ள உறுதி மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளது.
ஆகவே, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அனைத்து அனைத்து இடங்களையும் மாபெரும் வெற்றியை பெறும் என உறுதியாக நான் நம்புகிறேன்" என்றார்.