கோவை 100-வது வார்டில் திமுக -அதிமுக இடையே கடும் மோதல்..! மாறி மாறி இரு கட்சியினரும் போராட்டம்

திமுகவினர் போத்தனூர் காவல்நிலையம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்ட நிலையில், காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதை அடுத்து திமுகவினர் கலைந்து சென்றனர். அதே சமயம் திமுகவினரைக் கண்டித்து அதிமுகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி போராட்டம் மேற்கொண்டனர்.


கோவை: கோவை மாநகராட்சியில் உள்ள 100-வது வார்டில் திமுகவினர் பரிசு பொருளும், பணமும் பட்டுவாடா செய்வதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், அதிமுக வேட்பாளர் வேணுகோபால் மற்றும் அதிமுக தொண்டர்கள் மற்றும் திமுகவினர் கடுமையாக மோதிக்கொண்டனர்.

இதில், அதிமுகவைச் சேர்ந்த சிலருக்குப் பலத்த காயமும் ஏற்பட்டுள்ளது. கத்தி குத்து அடைந்த சரவணன் என்பவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த மோதலில், 2-திமுகவினரும் காயம் அடைந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.



இந்நிலையில், திமுகவினர் மீது தாக்குதல் நடத்திய அதிமுக வேட்பாளர் வேணுகோபால் உள்ளிட்ட அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட திமுகவினர் போத்தனூர் காவல்நிலையம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதை அடுத்து திமுகவினர் கலைந்து சென்றனர்.



அதே சமயம் அப்பகுதியில் திமுகவினரைக் கண்டித்து அதிமுகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி போராட்டம் மேற்கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...