'75 மாணவர்கள் செயற்கைகோள் பணித்திட்டம்' - கற்பகம் கல்வி நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு

கற்பகம் கல்வி நிறுவனம் “75 மாணவர்கள் செயற்கைகோள் பணித்திட்டம்” என்னும் திட்டத்தின் கீழ் இன்று கற்பகம் உயர்கல்விக்கழக மேலாண்மைத்துறை அரங்கில் ஒரு விழிப்புணர்வு நிகழ்வை நடத்தியது.


கோவை: இந்திய அரசு தனது 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் “75-மாணவர்கள் செயற்கைகோள் பணித்திட்டம்” என்னும் அமைப்பில் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களால் உருவாக்கப்பட்ட 75-செயற்கைகோள்களை ஆகஸ்டு 2022-இல் விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளது.

கற்பகம் கல்வி நிறுவனம் “75 மாணவர்கள் செயற்கைகோள் பணித்திட்டம்” என்னும் திட்டத்தின் கீழ் 18.02.2022 வெள்ளிக்கிழமையன்று பிற்பகல் 3.30-மணியளவில் கற்பகம் உயர்கல்விக்கழக மேலாண்மைத்துறை அரங்கில் ஒரு விழிப்புணர்வு நிகழ்வை நடத்தியது.



இந்நிகழ்வில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பத்மஸ்ரீ பேரா. R.M. வாசகம், ஆப்பிள் செயற்கைகோள் திட்டத்தின் முன்னாள் இயக்குநர் முனைவர் K. கோபாலகிருஷ்ணன், கற்பகம் உயர்கல்விக்கழக துணைவேந்தர் முனைவர் சேது.சுடலைமுத்து, கற்பகம் உயர்கல்விக்கழக வேந்தர் முனைவர் இராச.வசந்தகுமார், கற்பகம் கல்வி நிறுவனத்தின் முதன்மைச் செயலர் க.முருகையா மற்றும் பதிவாளர் முனைவர் மு.பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இவ்விழிப்புணர்வு நிகழ்வானது உலகரங்கில் விண்வெளித்துறையில் இந்தியா தலைசிறந்து விளங்க விண்வெளி, எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவுகளில் படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தி புதிய திட்டங்களை செயற்படுத்தி வருவதைப் பற்றியும், மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வளர்க்கும் விதமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் செயல்பாடுகள் குறித்தும், செயற்கைகோள் செய்முறைகள் பற்றிய விளக்கக் காட்சிகள் அமைந்திருந்தன.

இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக கற்பகம் கல்வி நிறுவனம் “கற்பகம்சாட்” என்னும் செயற்கைகோளை கற்பகம் கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டு விண்ணில் செலுத்த இந்திய தொழில்நுட்ப காங்கிரஸ் சங்கத்தின் திட்ட இயக்குநருடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இவ்விழிப்புணர்வு நிகழ்வில் கற்பகம் கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்தியாவில் 160-கல்லூரிகளில் முதற் கல்லூரியாக கற்பகம் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தயாரித்த 1500 கிராம் எடையுள்ள செயற்கைக் கோள் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...