கோட்டைமேடு பகுதியில் பிரச்சாரம் செய்வது தொடர்பாக இருபிரிவினரிடையே மோதல்: எஸ்டிபிஐயினர் 9-பேர் மீது வழக்குப்பதிவு

கோவை கோட்டைமேடு பகுதியில் நேற்று இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் திமுக மற்றும் எஸ்டிபிஐ கட்சியினர் இடையே நடந்த மோதலில் எஸ்டிபிஐயினர் 9-பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை கோட்டைமேடு பகுதியில் நேற்று இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் திமுக மற்றும் எஸ்டிபிஐ கட்சியினர் இடையே நடந்த மோதலில் எஸ்டிபிஐயினர் 9-பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி தேர்தலில் 82-வது வார்டு, கோட்டைமேடு பகுதியில் திமுக சார்பில் முபஷீரா மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் ரஷீதா பேகம் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், நேற்று நடந்த பிரச்சாரத்தில் மோதல் ஏற்பட்டது.

அதனைக் குறித்து எஸ்டிபிஐ நிர்வாகி ஒருவர் கூறுகையில், நேற்று மாலை 4-5 மணி வரை பிரச்சாரம் நடந்த கோட்டைமேடு போலிஸாரிடம் எஸ்டிபிஐயினர் முன்னதாகவே அனுமதி பெற்று நேற்று கோட்டைமேடு பெருமாள் கோவில் வீதியில் பிரச்சாரம் மேற்கொண்டதாகத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து மாலை 4.15-க்கு எஸ்டிபிஐ சார்பில் பிரச்சாரம் நடத்தியதாகவும், அப்போது திமுகவினர் எஸ்.டி.பி.ஐ பிரச்சாரம் நடத்தும் தெருக்கு வந்ததாகவும், அப்பொழுது அங்கு கோஷங்களுடன் வந்த திமுகவினர் வேண்டும் என்றே எஸ்.டி.பி.ஐயிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.

திமுகவினர் மாலை 5-6 மணி வரை பிரச்சாரம் நடத்தவே அனுமதிப் பெற்றதாகவும் ஆனால் அவர்களுக்கு ஒதுக்கிய நேரத்திற்கு முன்னதகவே திமுகவினர் பிரச்சாரம் மேற்கொண்டதாக எஸ்டிபிஐ குற்றம்சாட்டினர். மேலும், திமுகவின் பிரசாரத்தில் பங்கேற்ற சில நபர்கள் வேண்டும் என்றே எஸ்டிபிஐ நபர்களை நோக்கித் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதில் இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டதில் எஸ்.டி.பி.ஐ சார்ந்த 9 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதனைக் குறித்து திமுக நிர்வாகி கூறுகையில், திமுக 3-மணி முதல் 6-மணி வரை பிரச்சாரம் நடந்த அனுமதி பெற்றதாக கூறிய அவர், திமுகவின் வேட்பாளர் வாகனம் மற்றும் பிரச்சாரத்தில் ஈட்டுப்பட்ட தொண்டர்கள் எஸ்டிபிஐ பிரச்சாரம் நடத்தும் கூட்டத்தினை கடக்கும் பொழுது கோஷங்களை நிறுத்திவிட்டதாகத் தெரிவித்தார்.

மேலும், எஸ்டிபிஐயினர் நீங்கள் ஊழல் ஆட்சி நடத்துகிறீர்கள். திமுகவினர் ரத்தம் பார்க்காமல் போக மாட்டார்கள் என்று வேண்டும் என்றே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதே சமயத்தில் எஸ்டிபிஐயினர் அவர்கள் கையில் வைத்திருந்த கொடிகுச்சியினை கொண்டு திமுகவினரைத் தாக்கியதில் காயங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என தெரிவித்தார். மேலும், தாக்குதல் நடத்திய 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...