தோல்வி பயத்தில் அதிமுக வேட்பாளர் திமுகவினர் மீது தாக்குதல் - அதிமுக வேட்பாளரைக் கைது செய்ய வலியுறுத்தி கோவையில் திமுகவினர் சாலைமறியல்!!

திமுகவினர் மீது தாக்குதல் நடத்திய அதிமுக வேட்பாளர் வேணுகோபால் உள்ளிட்ட அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுகவினர் போத்தனூர் காவல்நிலையம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதை அடுத்து திமுகவினர் கலைந்து சென்றனர்.


கோவை: கோவை மாநகராட்சி 100-வது வார்டில் தோல்வி பயத்தில் அதிமுக வேட்பாளர் திமுகவினர் மீது தாக்குதல் நடத்தினர்.

கோவை மாவட்டம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடை பெறுவதைத் தொடர்ந்து நேற்றுடன் பிரச்சாரம் நிரைவடந்த நிலையில், கோவை மாநகராட்சி 100-வது வார்டில் திமுக சார்பில் வேட்பாளர் கார்த்திகேயன் போட்டியிடுகின்றனர்.

அதனை தொடர்ந்து, அதிமுக வேட்பாளர் வேணுகோபால், மேட்டூர் பகுதியில் உள்ள திமுக அலுவலகத்திற்குள் புகுந்த திமுகவினரைத் தாக்கியும், திமுக அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக திமுகவினர் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் 2 திமுகவினர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவித்தனர்.

இந்நிலையில், திமுகவினர் மீது தாக்குதல் நடத்திய அதிமுக வேட்பாளர் வேணுகோபால் உள்ளிட்ட அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுகவினர் போத்தனூர் காவல்நிலையம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதை அடுத்து திமுகவினர் கலைந்து சென்றனர்.

மேலும் இதுதொடர்பாக திமுக நிர்வாகி கூறுகையில்:-

திமுகவினர் தமிழக முதல்வரின் சாதனைகளைக் கூறி சிறப்பாக வாக்கு சேகரித்துள்ளனர். இதனால், திமுக மகத்தான வெற்றியைப் பெற உள்ளது. இதைத் தாங்கிக் கொள்ள முடியாத,100-வது வார்டு அதிமுக வேட்பாளர் வேணுகோபால் திமுகவினரைத் தாக்கியும், திமுக அலுவலகத்தைச் சூறையாடியும் உள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியே இந்த போராட்டத்தில் ஈடுபட்டோம். காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளனர். நாங்கள் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி கலைந்து செல்கிறோம் என்றார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...