கோவையில் தேர்தல்‌ அலுவலர்களுக்கு நடைபெற்று வரும் மூன்றாம்‌ கட்ட பயிற்சி வகுப்பை தேர்தல்‌ பார்வையாளர் நேரில்‌ ஆய்வு..!

மேலும், உக்கடம்‌ தெற்கு ஜி.எம்‌.நகர் ஹோலி பேமிலி கான்வென்ட்‌ பள்ளியில்‌ சி.சி.டி.வி கண்காணிப்புடன்‌ அமைக்கப்பட்டுள்ள பதட்டமான வாக்குச்சாவடி மையத்தை ஆய்வு செய்தார்.


கோவை: கோவை நிர்மலா மகளிர்‌ கல்லூரியில்‌ நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது வாக்குச்சாவடி மையங்களில்‌ தேர்தல்‌ பணியில்‌ ஈடுபடும்‌ தேர்தல்‌ அலுவலர்களுக்கு மூன்றாம்‌ கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்று வருவதை கோவை மாவட்டத்திற்கான தேர்தல்‌ பார்வையாளர்‌ எம்‌.கோவிந்த ராவ்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



பின்னர், உக்கடம்‌ தெற்கு ஜி.எம்‌.நகரில் அமைந்துள்ள ஹோலி பேமிலி கான்வென்ட்‌ பள்ளியில்‌ சி.சி.டி.வி கண்காணிப்புடன்‌ அமைக்கப்பட்டுள்ள பதட்டமான வாக்குச்சாவடி மையத்தை ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில்‌, தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்‌ மற்றும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., அவர்கள்‌ முன்னிலை வகித்தார்‌.

இதுகுறித்து கோவை மாவட்டத்திற்கான தேர்தல்‌ பார்வையாளர்‌ அவர்கள்‌ தெரிவித்ததாவது:-



கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ உள்ள 100 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித்‌ தேர்தல்‌ வாக்குப்பதிவு எதிர்வரும்‌ 19.02.2022 அன்று நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி மையங்களில்‌ பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள்‌, படிவங்கள்‌ மற்றும்‌ உபகரணங்களை எவ்வாறு வழங்க வேண்டும்‌, எவ்வாறு திரும்பப் பெற வேண்டும்‌ என்பது குறித்த பயிற்சிகள்‌ 315 மண்டல அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவிற்கு முந்தைய நாள்‌ வாக்குச்சாவடி மையங்களில்‌ வாக்குப்பதிவு இயந்திரங்கள்‌ உள்ளிட்ட உபகரணங்கள்‌ வழங்கப்படும்‌. அதனை வாக்குச்சாவடி அலுவலர்கள்‌ பெற்றுக்கொள்வார்கள்‌. பின்னர்‌ வாக்குப்பதிவு முடிவுற்ற உடன்‌ மண்டல அலுவலர்கள்‌ வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு சென்று பெற்றுக்கொள்வார்கள்‌.

மேலும்‌, நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித்‌ தோதலை நேர்மையுடனும்‌, வெளிப்படைத்தன்மையுடனும்‌, நடுநிலையுடனும்‌ தேர்தலை நடத்திட அனைத்து அலுவலர்களும்‌ முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமெனவும்‌, நடைபெறவிற்கும்‌ தேர்தல்‌ வாக்குப்பதிவு குறித்த விபரங்களை ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு எவ்வளவு நடைபெற்றுள்ளது என்பது குறித்து தகவல்‌ தெரிவிக்க வேண்டும்‌.

ஓட்டுப்பதிவு அன்று பணிகளில்‌ ஈடுபடும்‌ தேர்தல்‌ அலுவலர்கள்‌, பணியாளர்கள்‌ தங்கள்‌ பணியினை பெற்றுக்கொண்டு வாக்குப்பதிவு மையத்திற்கு சென்று மண்டல அலுவலர்கள்‌ மூலமாக வழங்கப்படும்‌ வாக்குப்பதிவு இயந்திரங்கள்‌ மற்றும்‌ வாக்குச்சாவடிகளில்‌ பயன்படுத்துகின்ற பொருட்களை பெற்றுக்கொண்ட, பொருட்கள்‌ அனைத்தும்‌ சரியாக உள்ளனவா என பட்டியலை ஆய்வு செய்ய வேண்டுமென கோயம்புத்தூர்‌ மாவட்டத்திற்கான தேர்தல்‌ பார்வையாளர்‌ எம்‌.கோவிந்த ராவ்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ கேட்டுக்‌ கொண்டுள்ளார்‌.



அதனைத்‌ தொடர்ந்து, உக்கடம்‌ தெற்கு ஜி.எம்‌.நகரில்‌ அமைந்துள்ள ஹோலி பேமிலி கான்வென்ட்‌ பள்ளியில்‌ சி.சி.டி.வி கண்காணிப்புடன்‌ அமைக்கப்பட்டுள்ள பதட்டமான வாக்குச்சாவடி மையத்தை கோயம்புத்தூர்‌ மாவட்டத்திற்கான தேர்தல்‌ பார்வையாளர்‌ அவர்கள்‌ நேரில்‌ சென்று ஆய்வு செய்தார்‌.



பின்னர், கோயம்புத்தூர்‌ மாநகராட்சி அலுவலகத்தில்‌ செயல்படும்‌ கட்டுப்பாட்டு அறை, தேர்தல்‌ பிரிவு ஆகியவற்றை ஆய்வு செய்தார்‌.

இந்த ஆய்வின்போது, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மரு.மோ.ஷா்மிளா அவர்கள்‌, உதவி தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்கள்‌ மற்றும்‌ தேர்தல்‌ பணிகளில்‌ ஈடுபடும்‌ மாநகராட்சி பணியாளர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...