திமுகவினரை கண்டித்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தி வந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கைது

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வந்ததால், காவல்துறையினர் 9 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களையும் வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்றனர்.



கோவை: திமுகவினரை கண்டித்து இன்று காலை முதல் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டு வந்தனர்.



அவர்களிடம், மாவட்ட ஆட்சியர் சமீரன் பேச்சுவார்த்தை நடத்தியும், காவல்துறையினர் பலமுறை சமரச பேச்சுவார்த்தை நடத்தியும், போராட்டமானது தொடரப்பட்ட நிலையில், அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.



பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வந்ததால், காவல்துறையினர் 9 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களையும் வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்றனர்.



இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டிருந்த அதிமுக தொண்டர்கள் காவல்துறையினரை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.



தற்போது, கைது செய்யப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ க்கள் அனைவரும் ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...