கோவை, நீலகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..!

கேரளா மற்றும் அதையொட்டிய பகுதியில் கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.


கோவை: தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கேரளா மற்றும் அதையொட்டிய பகுதியில், கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தென் கடலோர மாவட்டங்களில், இன்று மிதமான மழை பெய்யும். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும்.

சென்னையில் காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும். நாளை மற்றும் நாளை மறுநாளில், தென் மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில், மிதமான மழை பெய்யும்.

வரும் 21ம் தேதி கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக, கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறையில், 6 செ.மீ., மழை பெய்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...