வாக்குச் சாவடிகள் அருகே 200 மீட்டர் தூரத்திற்கு எல்லைக்கோடுகள் போடும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு பேரூராட்சி தேர்தலில் வாக்குச்சாவடிக்கு அருகே வேட்பாளர்கள் வாக்கு பதிவு சேகரிக்க எல்லைக்கோடுகள் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் நாளை சனிக்கிழமை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்காக வாக்குச் சாவடி மையங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வாக்குப் பதிவு நாளான நாளை வாக்குச்சாவடி அருகே வேட்பாளர்கள் ஓட்டுப் போட வரும் மக்களிடம் வாக்கு சேகரிக்க எல்லைக் கோடுகள் வரையப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகள் அருகே 200 மீட்டர் தூரத்திற்கு எல்லைக்கோடுகள் போடும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கலைவாணர் வீதி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையப்பகுதியில் 200 மீட்டர் தொலைவிற்கு எல்லைக் கோடுகள் வரையப்பட்டு வருகிறது.
இதனால், நாளை நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்கள் எல்லைக் கோட்டை தாண்டி மக்களிடம் வாக்கு சேகரிக்கக் கூடாது என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.