கோவை கிணத்துக்கடவு அருகே மூதாட்டியை இரும்பு கம்பியால் தாக்கிய கூலித்தொழிலாளி கைது..!

பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து கூலித் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு சிக்கலாம்பாளையத்தில் மூதாட்டியை இரும்பு கம்பியால் தாக்கிய கூலித்தொழிலாளியை பெண் வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சிக்கலாம்பாளையம் சக்தி நகரை சேர்ந்தவர் கார்த்திக். கூலித்தொழிலாளியான இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், 3 பெண்குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில், சங்கீதாவின் கணவர் கார்த்திக் அடிக்கடி குடித்துவிட்டு மனைவி சங்கீதா மீது சந்தேகப்பட்டு குடும்பதராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனால் கடந்த ஒரு மாதமாக கார்த்திக் கோவை சின்னியம்பாளையத்தில் தங்கி அங்கே வேலை செய்து இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் சங்கீதா வீட்டின் அருகே வசித்து வரும் கார்த்திக்கின் தங்கை வனிதாவின் கணவர் கூலித்தொழிலாளியான ரமேஷ் (36), கார்த்திக் ஆகிய 2 பேரும் சங்கீதாவின் தந்தை ராஜேந்திரன் வீட்டிற்குச் சென்று சங்கீதாவைப் பற்றி கெட்ட வார்த்தையால் பேசி திட்டி தகராறில் ஈடுபட்டனர்.

பின்னர், ரமேஷ், கார்த்திக் 2 பேரும் இரும்பு கம்பியால் ராஜேந்திரனை தாக்க முயன்ற போது சங்கீதா, அவரது பாட்டி பொன்னம்மாள் ஆகிய 2 பேரும் தடுத்தனர்.

இதில் ரமேஷ் இரும்பு கம்பியால் தாக்கியதில் பொன்னம்மாள் காயம் அடைந்தார். காயமடைந்த பொன்னம்மாள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து, சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் சங்கீதாவின் கணவர் கார்த்திக், உறவினர் ரமேஷ் ஆகியோர் மீது கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார்.

இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் ரமேஷை கைது செய்தனர்.

தலைமறைவாக உள்ள கார்த்திக்கை கிணத்துக்கடவு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...