உஷார்..! திருப்பூரில், ‘க்யூ ஆர்’ கோடு ஸ்டிக்கர் மூலமாக நுாதன திருட்டு..! ஸ்டிக்கர் மீது வேறு ஸ்டிக்கர் ஓட்டி திருடி வரும் கும்பல்.

திருப்பூர் முதலிபாளையம் அருகே உள்ள கடையில் 'க்யூ ஆர்’ ஸ்டிக்கரின் மேல் வேறு ஒரு ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதை கடையில் இருந்த ‘சிசிடிவி’ கேமரா பதிவு மூலம் தெரியவந்துள்ளது. நள்ளிரவில் மர்மநபர் ஒருவர், ‘ஸ்டிக்கர்’ மீது,’ க்யூ ஆர்’ மட்டும் வெட்டி ஒட்டி செல்வது காட்சி பதிவாகியுள்ளது.


திருப்பூர்: பெரிய வணிக வளாகங்கள் முதல் சிறிய தள்ளுவண்டி கடைகள் வரை ‘க்யூ ஆர்’ கோடு (QR Code) அட்டைகள் மூலம் வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை பெறுவது வாடிக்கையான ஒன்றாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ‘க்யூ ஆர்’ கோடு என்பது, வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை உடனடியாக செலுத்துவதற்கான வசதியாகும்.

அனைத்து வகையான ‘ஸ்மார்ட் போன்’களில் பதிவு செய்யப்பட்ட வங்கி கணக்கில் இருந்து யாருக்கு பணம் செலுத்த வேண்டுமோ அவர்களின் ‘க்யூ ஆர்’ கோடை ஸ்கேன் செய்து பணம் அனுப்பலாம்.பொதுமக்கள் பலரும் கடைகளுக்கு செல்லும் போது ‘க்யூ ஆர்’ கோடுகளை ‘ஸ்கேன்’ செய்து பணத்தை அனுப்பும், ‘டிஜிட்டல்’ பணபரிவர்த்தனைகள் செய்கின்றனர்.

நூதன திருட்டு...!

இந்த நிலையில், சமீபத்தில் திருப்பூரின் பல இடங்களில் கடைகளில் பணப்பரிவர்த்தனைக்காக ஒட்டப்படும் ‘க்யூ ஆர்’ ஸ்டிக்கர் மீது மர்ம நபர்கள் நள்ளிரவில் போலியான ஸ்டிக்கர் ஒட்டி நுாதன முறையில் திருடுவதாக போலீசாருக்கு புகார் வர துவங்கியுள்ளது.

திருப்பூரை அடுத்த முதலிபாளையம் சிட்கோவை சேர்ந்தவர் துரைசாமி ஓட்டல் மற்றும் ‘பாஸ்ட் புட்’ கடை நடத்தி வருகிறார். கடந்த இரு நாட்களுக்கு முன்பு இவரது கடைக்கு சாப்பிட சென்ற ஒருவர் சாப்பிட்டு விட்டு அங்கு ஒட்டியிருந்த, ‘க்யூ ஆர்’ கோடை ஸ்கேன் செய்து, பணத்தை அனுப்பினார். ஆனால், பணம் துரைசாமியின் வங்கி கணக்குக்கு பணம் வரவில்லை.

எனவே, மீண்டும் ஒரு முறை ‘ஸ்கேன்’ செய்த போது, ‘க்யூ ஆர்’ கோடில் ஓட்டல் பெயரில்லாமல், வேறு எதோ பெயர் வந்துள்ளது. இதனை, அந்த வாடிக்கையாளர் துரைசாமியிடம் முறையிட்டுள்ளார். இதையடுத்து,வங்கி மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணைக்கு பின் கடையில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரை துரைசாமி சரி பார்த்துளார்.

அதில், க்யூ ஆர்’ ஸ்டிக்கரின் மேல் வேறு ஒரு ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். கடையில் இருந்த ‘சிசிடிவி’ கேமரா பதிவை ஆய்வு செய்த போது, நள்ளிரவில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த ஒருவர்,‘ஸ்டிக்கர்’ மீது, ’க்யூ ஆர்’ மட்டும் வெட்டி ஒட்டி செல்வது தெரியவந்துள்ளது.

இதே போன்று அருகே உள்ள மற்றொரு ஓட்டல், ஒர்க்ஷாப், மளிகை கடை என முதலிபாளையம் சிட்கோவில் உள்ள பெரும்பாலான கடைகளில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த நூதன கொள்கையால், பாதிக்கப்பட்ட கடைக்காரர்கள் ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில், ஊத்துக்குளி காவல் துறையினர்தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரும்பாலான கடைகளில் வாடிக்கையாளர்கள் வசதிக்காக ஸ்கேன் செய்ய கடைகள் முன்பு உள்ளசுவற்றில் மற்றும் தள்ளுவண்டி பலகைகளில் இந்த க்யூ ஆர் கோடு ஒட்டப்பட்டுள்ள நிலையில், இது போன்ற நூதன திருட்டு வணிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனவே, இனி , க்யூ ஆர் கோடுகளை வெளியே ஒட்டாமல், ஒரு பதாகை போல் செய்து வைத்து கொண்டு, வரும் வாடிக்கையாளர்களுக்கு அதை காண்பித்து பணிவர்த்தனை செய்து கொள்ள காவல்துறையினர் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...