கோவையில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது, பாதுகாப்பை பலப்படுத்த துணை ராணுவப் படையை நியமிக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம், அதிமுகவினர் மனு

கோவையில் தேர்தல் தேதி ஆரம்பித்த நாளிலிருந்து, கரூர் மற்றும் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆட்களை வரவழைத்து, திமுகவினர் பல்வேறு இடங்களில் மிரட்டல்கள் விடுவதால், தேர்தல் நியாயமாக நடைபெற துணை இராணுவப் படையினரை நியமிக்க வேண்டும் - கோவை அதிமுக.


கோவை: கோவையில் தேர்தல் தேதி ஆரம்பித்த நாளிலிருந்து, கரூர் மற்றும் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆட்களை வரவழைத்து, திமுகவினர் பல்வேறு இடங்களில் மிரட்டல்கள் விடுவதால், தேர்தல் நியாயமாக நடைபெற துணை இராணுவப் படையினரை நியமிக்க வேண்டும், என்று அதிமுக சார்பில் கோவை மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.



கோவை மாவட்ட அதிமுகவினர், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி வேலுமணி ஆணைக்கிணங்க கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர்.



அவர்கள் அளித்த மனுவில், "நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு திமுகவினர் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கி வருகின்றனர். மேலும், வன்முறை செயல்களில் திமுக வினர் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பறக்கும் படையினர் காவல்துறையினர் திமுகவினருக்கு சாதகமாக செயல்பட்டு வருகின்றனர் .எனவே, இந்த தேர்தல் நியாயமாக நடப்பதற்கு துணை ராணுவ படையினரை நியமிக்க வேண்டும்", என குறிப்பிட்டிருந்தனர்.

மேலும், தேர்தல் தேதி ஆரம்பித்த நாளிலிருந்து திமுகவினர் கரூர் மற்றும் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆட்களை வரவழைத்து கோவை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் மிரட்டல்கள் விடுவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால், வாக்கு எண்ணிக்கை நடக்கும் வரை வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு போட வேண்டும், என்று மனுவில் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...