கிணத்துக்கடவில் 4-வது வார்டு பகுதியில் திமுக வேட்பாளர் இறுதிக்கட்ட தீவிர வாக்கு சேகரிப்பு

4-வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மார்க்கெட் சின்னு என்ற சின்னசாமி கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் முகம்மது யாசின் சொலவம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், வடபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் அசோக்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


கோவை: கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் உள்ள 15-வார்டுகளில் திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 48-பேர் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளர்கள் இன்று வாக்கு சேகரிப்புக்கு இறுதி நாள் என்பதால் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

கிணத்துக்கடவு பேரூராட்சி 4-வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மார்க்கெட் சின்னு என்ற சின்னசாமி கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் முகம்மது யாசின் சொலவம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், வடபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் அசோக்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும், இன்று மாலை 6-மணியுடன் வாக்கு சேகரிப்பு நிறைவடைந்து உள்ளதால், வாக்காளர்களிடம் தாங்கள் வெற்றி பெற்றால் செய்யக் கூடிய திட்டங்களைக் கூறியும் வாக்குகளைச் சேகரித்து நிறைவு செய்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...