கிணத்துக்கடவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரச்சாரம்

கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரச்சாரம் மேற்கொண்டார்.


கோவை: கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரச்சாரம் மேற்கொண்டார்.

வருகிற 19-ஆம் தேதி நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் உள்ள 15 வார்டுகளில் அதிமுக சார்பில் 15 வார்டுகளில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இன்று கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுக கொறடாவான எஸ்.பி.வேலுமணி பிரச்சாரம் மேற்கொண்டார்.



பிரச்சாரத்தில் பேசிய எஸ்.பி வேலுமணி கடந்த அதிமுக ஆட்சியில் கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இருப்பதாகவும், எனவே கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த பிரச்சாரத்தின் போது கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ. தாமோதரன், கிணத்துக்கடவு நகர செயலாளர் மூர்த்தி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...