பொள்ளாச்சி அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்த 19 வயது வாலிபர் கைது செய்யப்பட்டு, போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெருந்துறை சிறையில் அடைத்தனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்த 19 வயது வாலிபர் கைது செய்யப்பட்டு, போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெருந்துறை சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி காணவில்லை என்று கடந்த 7ம் தேதியன்று அவரது பெற்றோர்கள் ஆனைமலை போலீசில் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் காணாமல் போன சிறுமியைத் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று காணாமல் போன சிறுமி ஈரோடு அருகே உள்ள அந்தியூர் பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
பின்னர் அங்கு சென்ற போலீசார், சிறுமியை மீட்டு விசாரணை செய்ததில், ஆனைமலையில் தனியார் ஹோட்டலில் பணியாற்றும் ஆனந்த் குமார்(19) என்பவருக்கும், சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு இருந்தது.
மேலும், அவர் கடந்த 7 ஆம் தேதி சிறுமியை அழைத்துச் சென்று பல்லடம் அருகே உள்ள ஒரு கோயிலில் வைத்து, இருவரும் திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, சிறுமியை மீட்ட போலீசார் ஆனந்த் குமார் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெருந்துறை சிறையில் அடைத்தனர்.