வெற்றி பெற்று வந்தவுடன் முதல் 100 நாட்களில் மனுக்களுக்கு தீர்வு காண்பித்து கொடுப்பேன் என 97வது வார்டு திமுக வேட்பாளர் நிவேதா சேனாதிபதி தெரிவித்தார்.
கோவை: முதல்வர் ஸ்டாலின் பாணியில் வாக்கு சேகரிப்பின் போது பெறப்பட்ட மனுக்கள் மீது வெற்றிபெற்றவுடன் 100 நாட்களில் தீர்வு காணப்படும் என்று திமுக வேட்பாளர் நிவேதா சேனாதிபதி தெரிவித்தார்.
கோவை மாநகராட்சி 97வது வார்டில் திமுக சார்பில் இளம்பெண் நிவேதா சேனாதிபதி போட்டியிடுகிறார். முதல்வர் மு.க ஸ்டாலின் பாணியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் கடந்த சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் மக்களை சந்தித்து மனுக்களை பெற்றார்.
ஆட்சி பொறுப்பு ஏற்ற 100 நாட்களில் தீர்வு காண்பதாக தெரிவித்து இருந்தார். பின்னர், அதற்கென ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமித்து தீர்வை கண்டுவருகிறார்.
அந்த பாணியில் 22 வயதுடைய இளம் வேட்பாளரான நிவேதா சேனாதிபதி கடந்த 10 நாட்களில் 97வது வார்டில் 2 ஆயிரத்து 340 மனுக்கள் பெறப்பட்டு இருப்பதாகவும் பெரும்பாலன மனுக்களில் பட்டா, சாலை, குடிநீர், குப்பை பிரச்சனை, தெருவிளக்கு, முதியோர் உதவித்தொகை, கழிவு நீர் தொட்டி போன்ற அடிப்படை தேவைகள் கேட்டுள்ளதாகவும், வெற்றி பெற்று வந்தவுடன் முதல் 100 நாட்களில் இதை செய்து கொடுப்பேன் என நிவேதா சேனாதிபதி தெரிவித்தார்.