திருப்பூர் மாவட்ட விசைத்தறி மற்றும் ஜவுளித்துறை உற்பத்தியாளர்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு..!

இதன் மூலம் கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்தக் கோரி நடைபெற்று வந்த திருப்பூர் மாவட்ட விசைத்தறி உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்தது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்களுக்கும், ஜவுளித்துறை உற்பத்தியாளர்களுக்கும் இடையே அமைச்சர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

இதன் மூலம் கடந்த 39 நாட்களாக கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த வலியுறுத்தி நடைபெற்று வந்த திருப்பூர் மாவட்ட விசைத்தறி உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

திருப்பூர் மாவட்டம் மற்றும் கோவை மாவட்டங்களில் சுமார் இரண்டரை லட்சம் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் , 3 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதரமாக விளங்குகிறது.

இந்நிலையில், விசைத்தறி உரிமையாளர்களுக்கும் ஜவுளித்துறை உற்பத்தியாளர்களுக்கும் இடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் சோமனூர் ரகங்களுக்கு 23 சதவீதம், பல்லடம் உள்ளிட்ட இதர ரகங்களுக்கு 20 சதவீதம் என ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால், டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் புதிய கூலி உயர்வின் அடிப்படையில் ஜவுளித்துறை உற்பத்தியாளர்கள் தங்களுக்கு கூலி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்னிறுத்தி கடந்த ஜனவரி மாதம் முதல் கோவை மாவட்டம் மற்றும் திருப்பூர் மாவட்டத்திலுள்ள கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனால் சுமார் 2.5 லட்சம் விசைத்தறிகள் இயங்காததால் நாள் ஒன்றுக்கு சுமார் 60 கோடி ரூபாய் வரை வர்த்தக இழப்பு ஏற்பட்டது. விசைத்தறி உற்பத்தியாளர்கள் சார்பில் பல்வேறு போராட்டங்களும், பலகட்ட பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றது.

இந்நிலையில், இன்று அமைச்சர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கோவை மாவட்ட விசைத்தறி உற்பத்தியாளர்கள் பங்கேற்காத நிலையில், திருப்பூர் மாவட்ட விசைத்தறி உற்பத்தியாளர்களுக்கும் ஜவுளி துறையினருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது.

அதன் அடிப்படையில், சோமனூர் ரகத்திற்கு 19% மற்றும் இதர ரகங்களுக்கு 15% வழங்க இருதரப்பினருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டு கையெழுத்திடப்பட்டது. 6 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் போடப்பட்ட ஒப்பந்தம் பற்றி பேசி முடிவு செய்துகொள்ளலாம் என்றும் உடன்பாடு ஏற்பட்டது.

இதனால் கடந்த 39 நாட்களாக நடைபெற்று வந்த திருப்பூர் மாவட்ட விசைத்தறிகள் வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வரும் நிலையில், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் நிலைப்பாடு இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...