கொரோனாவிற்கு பிறகு பொதுமக்கள் திரை அரங்கிற்கு வருகை புரிவது மகிழ்ச்சி அளிக்கிறது - நடிகர் விஷ்ணு விஷால்..!

ஓடிடியில் திரைப்படங்கள் வெளியிடப்படுவது நல்லது தான் எனினும் திரையரங்கிற்கான வரவேற்பு என்றும் குறையாது என்றார்.


கோவை: கொரோனாவிற்கு பிறகு பொதுமக்கள் திரை அரங்கிற்கு வருகை புரிவது மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்தார்.

இன்று முதல் திரையரங்குகளில் 100 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகியுள்ள FIR திரைப்படத்தின் குழுவினர் இயக்குனர் மனோ ஆனந்த், நடிகர் விஷ்ணு விஷால், நடிகை ரெபா மோனிகா ஆகியோர் கோவையில் தனியார் திரையரங்கிற்கு பார்வையிட வருகை புரிந்து இருந்தனர். அப்போது, அங்குள்ள பார்வையாளர்களிடம் சிறிது நேரம் கலந்துரையாடினர்.



அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் விஷ்ணு விஷால், இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவித்தார். கொரோனாவிற்கு பிறகு பொதுமக்கள் திரை அரங்கிற்கு வருகை புரிவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

இந்த படத்தில் மதத்தை தவறாக சித்தரிக்கும் வகையில் எதுவும் செய்யவில்லை எனவும் சிலர் அதனை தவறாக புரிந்து கொண்டுள்ளனர் என்றார். ஓடிடி படங்களை பொறுத்தவரை திரையரங்குகளுக்கு மாற்றாக அமைந்துள்ளது. அதில் பல்வேறு திரைப்படங்கள் வெளியிடப்படுவது நல்லது தான் எனினும் திரையரங்கிற்கான வரவேற்பு என்றும் குறையாது என தெரிவித்தார்.



மேலும், என்னைப் பொறுத்தவரை சினிமா என்பது வியாபாரம் தான் என தெரிவித்த அவர், அதனை கமர்ஷியலாக இருக்கும் பொழுது சில நெகடிவ் விமர்சனங்கள் வருவது இயல்புதான் எனவும் அதனை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று தெரிவித்தார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...