கோவையில் தி.மு.க நிர்வாகிகள் தங்கியிருந்த வீடு, கார் மீது தாக்குதல்: அ.தி.மு.க பகுதி செயலாளர் உட்பட 27 பேர் மீது வழக்கு..!

கரூர் மாவட்ட திமுக விவசாய அணி செயலாளர் தலைமையிலான 10 பேர் கொண்ட குழு மீதும், கார் மீதும் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.


கோவை: கோவையில் தி.மு.க நிர்வாகிகள் தங்கியிருந்த வீடு, கார் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக அ.தி.மு.க பகுதி செயலாளர் உட்பட 27 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், கோவை மாவட்ட தி.மு.க பொறுப்பாளராக உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள், கரூர் மாவட்ட தி.மு.கவினர் கோவை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில், கரூர் மாவட்ட விவசாய அணி செயலாளர் சண்முகம் தலைமையில் 10 பேர் கொண்ட குழு கோவை மாநகராட்சியின் 88வது வார்டில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளரின் சகோதரரான சந்தோஷ் என்பவருக்கு சொந்தமான குனியமுத்தூர் செங்குளம் அருகே உள்ள தோட்டத்து வீட்டில் தங்கி உள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 12.30 மணி அளவில் 10க்கும் மேற்பட்ட கும்பல் திடீரென அந்த வீட்டின் மீதும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் மீதும் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த திடீர் தாக்குதலால் வீட்டில் கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் கார் கண்ணாடி ஆகியவை சேதமடைந்தது. இதில் தி.மு.கவை சேர்ந்த ரகுநாதன் என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.



இந்த நிலையில், ரகுநாதன் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் தாக்குதல் நடத்திய அ.தி.மு.க 88வது பகுதி செயலாளர் ஜெகன் உட்பட 27 பேர் மீது கலகம் செய்தல், கொலை மிரட்டல், ஆயுதம் மூலம் காயம் ஏற்படுத்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...