விபத்தில் படுகாயமடைந்த மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை: கோவை - பொள்ளாச்சி சாலையில் கார் - லாரி மோதிய விபத்தில் தாய் - மகன் பரிதாபமாக பலியாகினர்.

கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்ற காரும் எதிரே அதிக பாரம் ஏற்றிவந்த லாரியும் நேருக்கு, நேர் மோதிய விபத்தில் ஷியாம் சுந்தர் (28) சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், அவரது தாய் மஞ்சுளா மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.
மேலும், விபத்தில் படுகாயமடைந்த தந்தை சவுடையன் மற்றும் ஷியாம் சுந்தரின் மனைவி சுவாதி இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.