நமது பிரச்சனைகளுக்கு நாமே தீர்வு காண வேண்டும் என்ற நோக்கிலும், இளைஞர்களுக்கு விழிப்புணர்வு தரும் நோக்கிலும் இதனை செய்ததாக தெரிவித்தார்.
கோவை: நகர்புற உள்ளாட்சி தேர்தலை அடுத்து கோவையில் அரசியல் கட்சிகளும் சுயேட்சை வேட்பாளர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அதிகாலையில் மீன் வியாபாரம், பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர், மாலையில் வறுத்த மீன்களை விற்கின்றார்.
கோவை 42வது வார்டில் போட்டியிடும் 37 வயதான வேட்பாளர் மருதுபாண்டியன். இவர் உடற்கல்வி மற்றும் கபடி பயிற்சிகளை அளித்து வருகின்றார்.
இந்நிலையில், 42வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர் மருதுபாண்டியன் கூறியதாவது:-
நான் சிறுவயதில் இருந்து கோவில்மேடு பகுதியில் வசித்து வருகின்றேன். பெரிதும் சுகாதாரம் அற்றே காணப்படுகின்றது. இப்பகுதியில் 37 வருடங்களாக எனது குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். எனது தந்தை மீன் வியாபாரம் செய்து என்னை படிக்கவைத்தார்.
அப்பொது அப்பாவிற்கு உதவியாக நானும் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டு இருந்தேன். தற்போது அப்பாவின் உடல்நிலை மோசம் அடைந்ததை அடுத்து மீன் வியாபாரத்தை முழுமையாக நானே கவனித்து கொள்கின்றேன். மேலும், தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றும் நான், மாணவர்களுக்கு கபடி பயிற்சியும் அளித்து வருகின்றேன், என்றார்.
கோவில் மேடு பகுதியில் 56 தெருக்கள் உள்ள நிலையில் இங்கு மக்களுக்கான அத்தியாவசிய தேவைகள் என்பது இல்லை. குடிநீர், சுகாதாரம், ரோடு வசதி, தெரு விளக்கு போன்ற வசதிகள் இங்கு சரிவர அமைத்து தரப்படவில்லை. கோவில் மேடு, வேலாண்டிபாளையம் பகுதிகளில் பெரிதும் இது போன்ற அத்தியாவசிய பிரச்சனைகள் தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கின்றது.
எனவே, 42வது வார்டில் சுயேட்சியாக பூபந்து மட்டையில் போட்டியிடும் நான் தனியாகவே சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றேன். நமது பிரச்சனைகளுக்கு நாமே தீர்வு காண வேண்டும் என்ற நோக்கிலும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு தரும் நோக்கிலும் இதனை செய்ததாக வேட்பாளர் மருதுபாண்டி தெரிவித்தார்.