கோவையில் சமூக வலைதளங்களை கண்காணிக்கும் அலுவலராக காவல் ஆய்வாளர் சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை: கோவை உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீசார், சமூக வலைதளங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. தாமரைக்கண்ணன் அறிவுரை வழங்கினார்.
உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம், கோவை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., தாமரைக்கண்ணன் தலைமை வகித்தார்.
மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட போலீஸ் கமிஷனர்கள், டி.ஐ.ஜி.,க்கள், எஸ்.பி.,க்கள், கூடுதல் எஸ்.பி.,க்கள் கலந்து கொண்டனர். உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு ஏ.டி.ஜி.பி., ஆலோசனை வழங்கினார்.
பிரசாரத்தின்போது அரசியல் கட்சியினர் இடையே மோதல், மத ரீதியான பிரச்சனைகள் ஏற்படும்போது மேற்கொள்ள வேண்டிய கட்டாய நடைமுறைகள் பற்றியும், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஓட்டு எண்ணிக்கை, வெற்றி ஊர்வலங்களின்போது கட்டாயம் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பான ஆலோசனைகளையும், அதிகாரிகளுக்கு ஏ.டி.ஜி.பி., வழங்கினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஏ.டி.ஜி.பி. பேசுகையில்,
'தேர்தல் காலங்களில் சமூக வலைதளங்களை, போலீசார் மிகுந்த கவனத்துடன் கண்காணிக்க வேண்டும். அதன் மூலம் பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தீர்வு காண முடியும்.
ஒவ்வொரு மாவட்டம், மாநகர போலீசிலும் இதற்கென பிரத்யேக அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்' என்றார்.
கோவை மாநகரில் சமூக வலைதளங்களை கண்காணிக்கும் அலுவலராக, போலீஸ் நுண்ணறிவுப்பிரிவு காவல் ஆய்வாளர் சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறினார்.