கோவை மாவட்டத்தில் அனைத்து கட்டிடப் பொறியாளர் சங்க துவக்க விழா..!

இந்த கூட்டத்தின் வாயிலாக இச்சங்கத்தின் புதிய தலைவராக சுரேஷ் குமார் பதவியேற்றுக் கொண்டார்.


கோவை: கோவை அவிநாசி சாலை, பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள தனியார் உணவகத்தில் கோவை மாவட்ட அனைத்து கட்டிட பொறியாளர் சங்கத்தின் துவக்க விழா இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் வாயிலாக இச்சங்கத்தின் புதிய தலைவராக சுரேஷ் குமார் பதவியேற்றுக் கொண்டார். மேலும், செயளாளாராக ரவிச்சந்திரன், பொருளாளராக ஜெயபிரகாஷ், துணைத்தலைவராக ரமேஷ் குமார் மற்றும் அலுவலக நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் விழா மேடையில் பதவியேற்றனர்.

இதனை தொடர்ந்து, நடைபெற்ற நிகழ்ச்சியில் விழாக்குழு தலைவர் சேவ்வேல் வரவேற்புரை நிகழ்த்தினார்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட யூஆர்சி கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் தேவராஜ், இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ், முன்னாள் தலைவர் நந்தகுமார், ஆர்ஆர் ஹவுசிங் உரிமையாளர் கர்ணபூபதி ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்ததுடன், அனைத்து நிர்வாகிகளின் பதவி பிரமாணத்தையும் ஏற்று வழி நடத்தினார்.

இதனை தொடர்ந்து அனைத்து நிர்வாகிகள் மத்தியில் பேசிய சங்கத்தின் புதிய தலைவர் சுரேஷ் குமார், இச்சங்கத்தின் வரும் ஆண்டு திட்டங்களையும், உறுப்பினர் நலன் பற்றியும், அனைவர் மத்தியிலும் எடுத்துரைத்தார்.

மேலும், இச்சங்கத்தின் அனைத்து சட்ட திட்டங்களையும் அனைத்து நிர்வாகிகளும் கடைபிடிப்பதுடன், இச்சங்கத்தின் வளர்ச்சி குறித்தும், இச்சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் அனைவருக்கும் தெளிவு படுத்தினார்.

அதேபோல, இச்சங்கத்தின் வளர்ச்சி என்பது அனைத்து பகுதிகளில் உறுப்பினர்களை மேம்படுத்தி, அனைத்து பகுதிகளில் கிளை சங்கங்களை உருவாக்கி, அனைத்து கட்டுமான பொறியாளர்களையும் இணைக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்று அனைவர் மத்தியிலும் பேசினார்.

இந்த நிகழ்வில் இச்சங்கத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் மணிகண்டன், தங்கவேலு, செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...