பாஜக சார்பில் போட்டியிடும் தன்னை வெற்றி பெறச் செய்தால் மத்திய அரசின் இலவச காஸ் இணைப்பு, காப்பீட்டு திட்டம், முத்ரா கடன் திட்டம் போன்றவற்றை பெற்றுத் தருவேன் என வாக்கு சேகரித்தார்.
கோவை: கோவை கிணத்துக்கடவு பேரூராட்சி 4வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் உள்ள 15 வார்டில் 6 வார்டுகளில் பாஜக சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் 4வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பான் சந்தர் ராஜ் இன்று தேரோடும் வீதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கட்சி நிர்வாகிகளுடன் சென்று மத்திய அரசு திட்டங்களை சொல்லி மக்களிடம் வாக்குகளை சேகரித்தார்.

மேலும், பாஜக சார்பில் போட்டியிடும் தன்னை வெற்றி பெறச் செய்தால் மத்திய அரசு திட்டங்களான இலவச காஸ் இணைப்பு, நல வாரியத்திட்டம், காப்பீட்டு திட்டம், முத்ரா கடன் திட்டம் போன்ற திட்டங்களை பெற்றுத் தருவேன் என்று வாக்குறுதி அளித்து வாக்கு சேகரித்தார்.
இவருடன் கிணத்துக்கடவு ஒன்றிய தலைவர் ரவிக்குமார், துணைத்தலைவர் செல்வேந்திரன், பிரச்சார தலைவர் தருமன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர்.