இறந்த குட்டியின் உடலை காக்கை உள்ளிட்ட பறவைகள் கொத்தி உண்ணும் காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை வ.உ.சி உயிரியல் பூங்காவில் புள்ளிமான் குட்டி இறந்து நீண்ட நாட்கள் ஆன நிலையில் கிடக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வ.உ.சி உயிரியல் பூங்காவில் கடந்த 15 நாட்களுக்கு முன் புள்ளிமான் ஒன்று இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது.
இந்நிலையில், அதில் ஒரு குட்டி மட்டும் இறந்து நீண்ட நாட்கள் ஆகிய நிலையில் அதே இடத்தில் கிடந்து வருகிறது. இறந்த குட்டியின் உடலை காக்கை உள்ளிட்ட பறவைகள் கொத்தி உண்ணும் காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே ஒரு குட்டியை மட்டுமே மான் ஈன்றதாக ஊழியர்கள் கூறி வந்த நிலையில், மேலும் இறந்த நிலையில் கண்டறியப்பட்ட குட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, ஊழியர்களின் அலட்சியத்தால் உயிரியல் பூங்காவிற்கு நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. மேலும், மான் குட்டி எவ்வாறு இறந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.